- Advertisement -
Homeபொழுதுபோக்குஆண்டவரின் நவீன தீண்டாமை.. பொது சேவையில் அறுத்து தள்ளிடுவாரு.. கமல் ஹாசனை வெளுத்து வாங்கிய ப்ளூ...

ஆண்டவரின் நவீன தீண்டாமை.. பொது சேவையில் அறுத்து தள்ளிடுவாரு.. கமல் ஹாசனை வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை மாறன்

- Advertisement -

இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர் கமல் ஹாசன். சிறு வயதிலிருந்தே தொடர்ந்து நடித்துவரும் அவர் இதுவரை 232 படங்களில் நடித்திருக்கிறார். பல படங்களை இயக்கியிருக்கிறார் தயாரித்திருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் புதுமையான பரிசோதனை முயற்சியை செய்யும் வழக்கத்தை பல ஆண்டுகளாகவே வைத்திருக்கிறார்.

அதன் காரணமாகத்தான் அவருக்கு சாமானியர்கள் முதல் இப்போதைய தலைமுறை இயக்குநர்கள்வரை ரசிகர்களாக இருக்கிறார்கள்.அதிலும் கௌதம் மேன்ன, லோகேஷ் கனகராஜ் எல்லாம் கமலின் எவ்வளவு வெறித்தனமான ரசிகர்கள் என்பது அனைவருமே அறிந்ததுதான். குறிப்பாக அவர்கள் எப்போது பேசினாலும் இந்த விஷயத்தை எல்லாம் கமல் சார் எப்பவோ செஞ்சிட்டார் என்றும் சொல்வார்கள்.

- Advertisement -

மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கும் கமல் ஹாசன் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகிறார். அதன்படி இந்தியன் 2, தக் லைஃப், ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படம் ஆகியவை ரிலீஸாகவிருகின்றன. அதேபோல் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தையும், சிம்புவை வைத்து ஒரு படத்தையும் தயாரிக்கவும் செய்கிறார் அவர்.

இந்த சூழலில் அவர் கடந்த 7ஆம் தேதி தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி திரை பிரபலங்களுக்கு பார்ட்டி, ரசிகர்களுக்கு விருந்து, கட்சியினருடன் சந்திப்பு என பிஸியாக இருந்தார். அந்தவகையில் நம்மவர் 69 என்ற நிகழ்ச்சியும் நடந்தது. அதில் ரசிகர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் கலந்துகொண்டனர்.

- Advertisement -

அப்போது கமல் ஹாசனுக்கு சால்வை அணிவிக்கவும், அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளவும் எவ்வளவோ முயன்றனர். ஆனால் கமல் ஹாசன் அருகில் ஒரு நொடிகூட நிற்கவிடாமல் பவுன்சர்கள் அனைவரையும் அடுத்தடுத்து நகர்த்தி சென்றனர். இதனை கமல் ஹாசனும் கண்டிக்கவில்லை. அதுதொடர்பான வீடியோ வெளியாகி கமலுக்காக என்னவெல்லாமோ செய்யும் செய்ய காத்திருக்கும் ரசிகர்களை தொடக்கூடவா கூடாது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கமலின் நவீன தீண்டாமை? பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வந்தும்.. நாலாபுறமும் இடைவெளி ஏற்படுத்தி‌.. குறுக்கே தடை அமைத்து.. வணக்கம் போட்ட கமல். இவரிடம் கை குலுக்கி, பக்கத்தில் நின்று புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டவர்களுக்கு ஏமாற்றம். திருப்பதி பாலாஜி கோவிலை விட கெடுபிடி காட்டிய கட்சியினர் மற்றும் பவுன்சர்கள். ரஜினி, விஜய்க்கு இருக்கும் சமத்துவ எண்ணம் கமலுக்கு இல்லாமல் போனது” என குறிப்பிட்டிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்