- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனி துணை முதல்வர் திரிஷா தான்… தவெக கட்சியை கலாய்க்கும் அரசியல் கட்சி விமர்சகர்கள் -...

இனி துணை முதல்வர் திரிஷா தான்… தவெக கட்சியை கலாய்க்கும் அரசியல் கட்சி விமர்சகர்கள் – மொத்த ஆட்டத்தையும் குளோஸ் செய்த விஜய்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு உச்ச நட்சத்திர நடிகராக விஜய் இருந்து வருகிறார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் அவர் உள்ளார். தமிழக மக்கள் மத்தியில் குறிப்பாக இளம் வயதினர் ஆண்கள் பெண்கள் மத்தியில் விஜய்க்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் இருந்து வருகிறது.

இப்படி ஒரு சூழலில் கடந்த மாதம் 27ம் தேதி விஜயின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜயிடம் இருந்த விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்த பரபரப்பான தகவல் வெளியாகி வைரலானது. நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவுடன் தனது கணவர் விஜய் இருந்து வருகிறார்.

- Advertisement -

கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதமே இது எனக்கு தெரிய வந்தது. இதுகுறித்து பலமுறை பேசியும் அவர் அந்த நடிகையின் உறவை தொடர்ந்தார். இதனால் ஒரே வீட்டில் 5 ஆண்டுகளாக நாங்கள் பிரிந்து வாழ்கிறோம் என்றும் சங்கீதா அதில் கூறியிருந்தார். விஜய் மீது அவரது மனைவியே இப்படி ஒரு புகாரை வெளிப்படையாக கூறிய விஜய் ரசிகர்கள் மத்தியிலும் தவெக கட்சியினர் மத்தியிலும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் நேற்று சென்னையில் நடந்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் இல்ல திருமண விழாவுக்கு நடிகர் விஜய், நடிகை திரிஷாவுடன் ஒரே காரில் ஜோடியாக வந்தார். இருவரும் ஒரே மாதிரியான நிறத்தில் பட்டாடையில் வந்து இந்த விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

- Advertisement -

மக்களின் அபிமானம் பெற்ற ஒரு நடிகர், குறிப்பாக அரசியல் களத்தில் ஒரு தலைவராக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆளுமை இப்படி தனது குடும்பத்தை மனைவி பிள்ளைகளை நிராகரித்து விட்டு தன்னுடன் நடித்த நடிகையுடன் தொடர்பில் இருப்பதை இப்படி வெளிப்படுத்தியதை பார்த்து பலரும் பலத்த அதிர்ச்சியடைந்தனர்.

தலைவன் என்பவன் ஒரு வழிகாட்டி. ஒழுக்கம் நேர்மை உண்மைக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். இப்படி குடும்பத்தை விட்டு விட்டு நடிகையை அழைத்துக்கொண்டு வரும் தவெக தலைவர் விஜய், நாளை ஒருவேளை தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஆகி விட்டால் துணை முதல்வர் திரிஷா தான் என்று மற்ற அரசியல் கட்சியினர் கலாய்த்து வருகின்றனர். கூட்டணி பலமும் இல்லை. பண பலமும் இல்லை. மக்கள் செல்வாக்கு மட்டும்தான் இருக்கு. அதையும் தலைவர் இப்படி கெடுக்கிறாரே? வருகிற தேர்தலில் டெபாசிட்டாவது கிடைக்குமா என்று தவெக கட்சி நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்