- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடப்பாவமே... கபாலி பட நேரத்துல இப்படி ஒரு கதையையா மிஸ் பண்ணாரு ரஜினிகாந்த்... என்ன கொடுமை...

அடப்பாவமே… கபாலி பட நேரத்துல இப்படி ஒரு கதையையா மிஸ் பண்ணாரு ரஜினிகாந்த்… என்ன கொடுமை சார் இது…

- Advertisement -

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே சூப்பர் ஸ்டார் என்னும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் ரஜினிகாந்த். அபூர்வ ராகங்களில் தொடங்கி எண்ணற்ற வெற்றிகளை பதிவு செய்துள்ள ரஜினிகாந்த், இன்று வரை நம்பர் ஒன் நடிகராக தனது இருப்பை தக்க வைத்து வருகிறார்.

90களில் பாட்ஷா, படையப்பா, முத்து என யாருமே கொடுக்க முடியாத வெற்றியை, விருந்தளித்து கொடிகட்டி பறந்த ரஜினிகாந்த் 2000 ஆண்டுகளில் கொஞ்சம் சறுக்க ஆரம்பித்தார். சந்திரமுகி எந்திரன் என்று பிரம்மாண்ட வெற்றிகள் அவர் கைவசம் போய் சேர்ந்தாலும், பல்வேறு திரைப்படங்கள் வந்த இடம் தெரியாமல் மறைந்து போயின.

பாபா, குசேலன், கோச்சடையான், லிங்கா உள்ளிட்ட திரைப்படங்கள் ரஜினிகாந்த்திற்கு பெருத்த அடியை கொடுத்தன. அந்த சமயத்தில், இளம் இயக்குனர்கள் பக்கம் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார் ரஜினிகாந்த். அப்போது மெட்ராஸ் படத்தை இயக்கிய பா ரஞ்சித்துடன் இணைந்த அவர் கபாலி காலா என இரண்டு திரைப்படங்களில் நடித்தார்.

இதில் காலா விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. ஆனால் கபாலி திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியில் கபாலி ராஜநடை போட்டது. அந்த சமயத்தில், கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் திரைப்படம் ரஜினிகாந்த்திற்கு சென்றதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக பேசி இருக்கும் கௌதம் மேனன், முதலில் இந்த கதையை சூர்யாவுக்கு தான் கூறினேன். ஸ்பை திரில்லர் ஜானரை கொண்ட இந்த திரைப்படத்தில், சூர்யாவுக்கு சில சந்தேகங்கள் இருந்ததால் அந்த பணிகள் வளராமலேயே போனது. இதன் பிறகு அதில் சிறிய மாற்றம் செய்து, ரஜினிகாந்திடம் கதை கூறினேன்.

அவருக்கும் இந்த திரைப்படத்தின் கதை ரொம்ப பிடித்து போனது. ஆனால் அங்கிருந்து அதை எடுத்துச் செல்லப்படவில்லை. அவரும் கபாலி படத்தில் வேலை செய்ய ஆரம்பித்து விட்டார் என்று கூறியிருக்கிறார். இதனால் சூர்யா ரஜினியை தாண்டி கடைசியில் விக்ரமிற்கு இந்த படம் சென்று இருப்பது தெரியவந்துள்ளது. பொருளாதாரப் பிரச்சினையால் சிக்கி தவித்த இந்த திரைப்பட விவகாரம் தற்போது சமூக நிலையை எட்டியுள்ளதால் வரும் 24ம் தேதி துருவ நட்சத்திரம் வெளியாகிறது.

சற்று முன்