- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியலுக்காக சினிமாவுக்கு முழுக்கு போடும் விஜய்-திடீர்ன்னு இப்படி குண்டை தூக்கிப் போட்டா எப்படி?

அரசியலுக்காக சினிமாவுக்கு முழுக்கு போடும் விஜய்-திடீர்ன்னு இப்படி குண்டை தூக்கிப் போட்டா எப்படி?

- Advertisement -

இந்த ஆண்டு பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ/மாணவியர்களுக்கு கடந்த 17 ஆம் தேதி விஜய் கல்வித்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சி விஜய்யின் அரசியல் நுழைவுக்கான முன்னோட்டம் என்றே கூறப்பட்டது.

விஜய் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய பிறகு சொந்தமாக அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகளை தொடங்கிவிட்டார் என்று பலரும் கூறுவார்கள். விஜய் பிறந்தநாட்களில் சமூக சேவைகளில் ஈடுபடுவது, இரத்த முகாம் அமைப்பது போன்ற பல பணிகளை மக்கள் இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.

- Advertisement -

ஆனால் சமீப காலமாக அதிரடியாக சில விஷயங்கள் நடைபெறுகிறது. அதாவது கடந்த அம்பேத்கர் ஜெயந்தி அன்று விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதே போல் இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினியை விஜய் மக்கள் இயக்கத்தினர் நேரில் சந்தித்து வாழ்த்துகள் கூறினார்கள். அதனை தொடர்ந்து கடந்த 17 ஆம் தேதி மாணவர்களுக்கு கல்வி விருது விழா நடந்தது. இதனை பார்க்கும்போது கடந்த சில மாதங்களாகவே விஜய் கள அரசியலுக்கு வருவதற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “விஜய் அரசியலுக்கு வந்தார் என்றால் ஒரு மிகப் பெரிய வியூகம் அமைக்க வேண்டிய தேவை இருக்கிறது. சமீபத்தில் நடந்த மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் கல்விச்சான்றிதழ் வழங்கும் விழாவிற்காகவே இரண்டு நாட்கள் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தார்.

- Advertisement -

திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடக்கிறதா என்பதை பார்க்க அவரே நேராக சென்று அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று கவனித்துக்கொண்டார். இந்த ஒரு நாள் நிகழ்ச்சிக்கே விஜய் இரண்டு நாட்கள் செலவழிக்கிறார் என்றால் அரசியல் என்பது எவ்வளவு பெரிய விஷயம். ஆதலால் விஜய் இரண்டு வருடங்கள் சினிமாவுக்கு பிரேக் எடுத்துவிட்டு அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகளில் இறங்கவுள்ளார் என்று கேள்விப்படுகிறேன்” என்று அப்பேட்டியில் கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்