- Advertisement -
Homeபொழுதுபோக்குஅன்று முதல் இன்று வரை சந்தானத்தின் சம்பளம் எந்தளவு உயர்ந்துள்ளது தெரியுமா... அனைத்தையும் புட்டு புட்டு...

அன்று முதல் இன்று வரை சந்தானத்தின் சம்பளம் எந்தளவு உயர்ந்துள்ளது தெரியுமா… அனைத்தையும் புட்டு புட்டு வைத்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா…

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஏராளமான நட்சத்திரங்கள் கொடி கட்டி பறந்தாலும், அவர்களில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சாதித்தவர்கள் குறைவான நபர்கள்தான். அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் முதலிடம் பிடிக்க, அவருக்கு அடுத்ததாக வருகிறார் காமெடி நடிகர் சந்தானம்.

ஆரம்பத்தில் தனியார் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் வந்த சந்தானம் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தார். ஒரு படத்தின் காட்சிகளை அப்படியே தங்கள் ரசனைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கும் அந்த நிகழ்ச்சிக்கும், அதில் தனக்கு ஏற்றது போல கவுண்டர் டயாலாக்குளை விட்டு நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் சந்தானத்திற்கும் இன்று வரை ரசிகர்கள் உண்டு.

லொள்ளு சபா கொடுத்த வரவேற்பால், வெள்ளி திரைக்கு மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்தார் சந்தானம். ஆரம்பத்தில் அவருக்கு நடிகர் சிம்புதான் வாய்ப்பு வழங்கினார். மன்மதன் மற்றும் வல்லவன் திரைப்படத்தில் வந்த சந்தானம், அங்கிருந்து தனக்கான ரூட்டை பிடித்து வளர்ச்சி கண்டார். அந்த நேரத்தில் சந்தானத்திற்கு மிக திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் சிவா மனசுல சக்தி.

நடிகர் ஜீவாவுடன் இணைந்து காமெடியில் கலந்து கட்டி அடித்த அவர், அதன் இயக்குனர் ராஜேஷ் உடன் கைகோர்த்து பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா என கிளாசிக் வெற்றிகளை கொடுத்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார் சந்தானம்.

இதன்பிறகு கதாநாயகன் பிம்பத்தின் மேல் அவருக்கு ஆசை வர, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல என்ட்ரியை கொடுத்தது. நடுவை தில்லுக்கு துட்டு உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தாலும், பெரும்பாலான படங்கள் தோல்வியாகவே அமைந்தன. பிஸ்கோத் ஏஜென்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட திரைப்படங்கள் வந்த இடம் தெரியாமல் ஓடிப் போனதால், ஹீரோ ஆசையை முடித்துக் கொள்ள நினைத்தார் சந்தானம். அந்த சமயத்தில் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வெளியாகி சந்தானத்திற்கு ஏறு முகத்தை கொடுத்தது.

இந்த நிலையில் தற்போது அவர் பில்டப் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற, அதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதாவது, ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஒன்றே முக்கால் லட்சம் சம்பளம் கொடுத்தேன். அதன் பிறகு 18 லட்சம் கொடுத்திருக்கிறேன். பிறகு அவரது சம்பளம் 56 லட்சம் ஆனது. அடுத்து ஒரு கோடியை 25 லட்சம் வழங்கினேன். இப்போது மூன்று கோடி ரூபாய் கொடுத்து இருக்கிறேன். இன்னும் 30 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கும் அளவிற்கு அவர் வளர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தயாரிப்பாளரின் இந்த பேச்சின் மூலம் சந்தானத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சற்று முன்