- Advertisement -
Homeபொழுதுபோக்குஅண்ணனோட நேரம் இப்ப பிச்சு உதறுது, ராஜ்கமல் நிறுவனத்துக்கு இதுவே முதல் படம், இதுவே கடைசி...

அண்ணனோட நேரம் இப்ப பிச்சு உதறுது, ராஜ்கமல் நிறுவனத்துக்கு இதுவே முதல் படம், இதுவே கடைசி படம் – சோனி நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு

- Advertisement -

தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது சொந்த சினிமா தயாரிப்பு நிறுவனம்தான் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் (ஆர்கேஎப்ஐ). இந்த நிறுவனத்தின் மூலம் கமல் நடித்த பல படங்கள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன. அதே போல், மற்ற நடிகர்கள் ஹீரோவாக நடிக்கும் படங்களையும் இந்த தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தையும், சிலம்பரசன் நடிக்கும் ஒரு படத்தையும் ராஜ்கமல் படத்தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. இதற்காக ராஜ்கமல் படத்தயாரிப்பு நிறுவனத்துடன் சோனி நிறுவனம் ஒப்பந்தம் (டை அப்) போட்டிருந்தது.

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தயாரிப்பு செலவு, குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் இருக்க வேண்டும் என, ராஜ்கமல் நிறுவனம் திட்டமிட்டு இருந்த நிலையில், நினைத்ததை விட படத்தின் பட்ஜெட் பலமடங்கு எகிறி விட்டது. ஏற்கனவே படக்குழுவுக்கு பலமுறை அறிவுறுத்தி இருந்தும் பட்ஜெட் கையை மீறி போய்விட்டது.

இதுகுறித்த சோனி நிறுவனத்திடம், ராஜ்கமல் நிறுவனம் பேசிய நிலையில், இப்படி எல்லாம் தாறுமாறாக செலவு செய்வதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பிட்ட பட்ஜெட் என்றால் அவ்வளவுதான் தர முடியும். மேலும், இப்படி முதல் படத்திலேயே நீங்கள் விதிமுறை மீறியதால், இந்த படத்துடன் நம் ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு விடலாம் என திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

- Advertisement -

இதையடுத்து இனி, சிலம்பரசன் படத்துக்கே தயாரிப்புக்கான மொத்த செலவையும் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம்தான் ஏற்க வேண்டும். அல்லது சோனி போன்ற பெரிய கார்பரேட் நிறுவனத்துடன் கமல்ஹாசன் பேசி, அவர்களை சம்மதிக்க வைத்து புதிதாக ஒப்பந்தம் போட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் குறித்து இமான் கூறிய குற்றச்சாட்டில் இருந்து அவருக்கு அயலான் படம் வெளியாவதே பெரிய போராட்டமாகி விட்டது. இப்போது அவர் நடிக்கும் படத்தை தயாரிக்கும் ராஜ்கமல் பட நிறுவனத்துக்கும், சோனி நிறுவனத்துக்குமான ஒப்பந்தமும் அவரது படத்துடன் மூடுவிழா கண்டுவிட்டது. அண்ணன் எஸ்கே வின் நேரம், கமல்ஹாசனுக்கே ஆப்பு வைத்துவிட்டதே என ரசிகர்கள் பலரும் கலாய்க்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்