- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயலலிதா ஆசையை நிறைவேற்றிய கார்த்தி, பெருமைப்பட்ட சிவக்குமார், வம்பிழுத்த ப்ளு சட்டை மாறனுக்கு ரசிகர்கள் கொடுத்த...

ஜெயலலிதா ஆசையை நிறைவேற்றிய கார்த்தி, பெருமைப்பட்ட சிவக்குமார், வம்பிழுத்த ப்ளு சட்டை மாறனுக்கு ரசிகர்கள் கொடுத்த நோஸ்கட்

- Advertisement -

சமீபத்தில் கார்த்தி நடித்த 25வது படமான ஜப்பான் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி நடந்தது. சென்னை நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், கார்த்தி 25 படங்களில் நடித்த சிறப்பு நிகழ்ச்சியும் கொண்டாடப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் கார்த்தி நடித்த படங்கள் குறித்தும் பேசப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கார்த்தியிடம் செய்தியாளர்கள், மெட்ராஸ் என்ற ஜாதி படத்தில் நடித்தது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது கார்த்தி, மெட்ராஸில் பிறந்து வளர்ந்த நான் எப்போதும் ஜாதி பார்த்தது கிடையாது. ஜாதி குறித்து மனிதர்களிடம் எந்த வித்யாசமும் நான் பார்த்தது இல்லை என்று கூறியிருந்தார்.

மேலும், பள்ளியில் ஒரே மாதிரியான சீருடை அணிவது போல் யாரையும் வித்யாசம் பார்க்க கூடாது என்ற அடிப்படையில் வளர்ந்தவன் நான். அதனால், ஜாதி குறித்த எந்த பாகுபாடும் இல்லை என கூறியிருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் கார்த்தியின் அப்பா நடிகர் சிவக்குமார் பேசிய ஒரு வீடியோவில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒருமுறை கார்த்தியும், நானும் சந்தித்த போது, உன் அண்ணன் சூர்யாவை போல, நீயும் காதல் திருமணம் செய்துகொள்ளாதே, உன் பெற்றோர் விருப்பம்போல் சொந்தத்தில் திருமணம் செய்துகொள் என்று அறிவுரை கூறியதாக, சிவக்குமார் அந்த வீடியோவில் கூறி இருக்கிறார்.

இந்த வீடியோவில் இருந்து கன்டென்ட் எடுத்த பளூசட்டை மாறன், ஜப்பான் விழாவில் ஜாதியே பார்ப்பதில்லை என்று கூறிய கார்த்தி, தனது திருமணத்தில் மட்டும் தங்கள் ஜாதியில் உள்ள பெண்ணாக பார்த்து, திருமணம் செய்து கொண்டிருப்பது சரிதானா என்பது போல, கார்த்தியை சீண்டி பேசி வம்பு இழுத்து ஒரு பதிவை வெளியிட, அது வைரலாகியது.

இதனால் ஆவேசப்பட்ட கார்த்தி, சூர்யா ரசிகர்கள் பலரும், திருமணம் என்பது அவரவர் சொந்த விஷயம். காதல் திருமணம், சொந்தத்தில் திருமணம் என்பது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். கார்த்தி, அவருக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார், இதில் ஏன் உங்கள் வயிறு எரிகிறது என நோஸ்கட் கொடுத்து, பதிவிட்டு வருகின்றனர். இதுவும் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சற்று முன்