- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயகாந்த் உடல்நிலை பின்னடைவாக உள்ளது ; கண்கலங்கிய விஜய பிரபாகரன், மனம் நொந்து பேசிய மன்சூர்...

விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவாக உள்ளது ; கண்கலங்கிய விஜய பிரபாகரன், மனம் நொந்து பேசிய மன்சூர் அலிகான்

- Advertisement -

தமிழ் சினிமாவின் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கோலோச்சி இருந்த சமயத்தில், சத்தம் இல்லாமல் வந்து சாதித்தவர் விஜயகாந்த். கிராமத்து பின்னணி கதை என்றாலும் சரி, அதிரடி ஆக்சன் கொண்ட போலீஸ் அதிகாரி என்றாலும் சரி தனது நடிப்பின் இறங்கி பட்டையை கிளப்பி விடுவார் விஜயகாந்த்.

நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்து பலரும் அரும்பணிகளை ஆற்றிய அவர், அரசியலில் இறங்கி தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சியை ஆரம்பித்தார். 2005 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக கட்சியை அவர் அறிவிக்க, அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

- Advertisement -

2011ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த விஜயகாந்த் கட்சி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தமிழ்நாட்டில் மூன்றாவது பெருங்கட்சியாக உருவெடுத்தது. ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவான அவர், இரண்டாவது முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்து எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.

2016 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில் தைராய்டு உள்ளிட்ட பிரச்சனைகளால் உடல்நல பாதிப்பு ஏற்பட்ட அவருக்கு, இன்று வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்கும் விஜயகாந்த், வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். அவர் மீண்டும் அரசியலுக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்கள் மற்றும் பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பேசிய அவரது மகன் விஜய பிரபாகரன், கேப்டன் உடல் நிலை சற்று பின்னடைவாகதான் உள்ளது. அவர் இருக்கும் உடல் நிலைக்கு 100 வயது வரை வாழ்வார். பழையபடி அவர் வருவதற்கும், பேசுவதற்கும், நடப்பதற்குமான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம். உங்கள் அனைவரைப் போல நாங்களும் நம்புகிறோம் என்று பேசியுள்ளார்.

இதேபோல் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கும் நடிகர் மன்சூர் அலிகான் விஜயகாந்த் பற்றி கூறியதாவது, விஜயகாந்த் மாதிரி ஒரு நல்ல மனிதர் இருக்கவே முடியாது. நிறைய பேருக்கு உணவளித்து வாழவைத்த மனிதர். நிறைய இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் முன்னேற காரணமாக இருந்தார். பாழாய் போன அரசியலால் அவரை பேச வைத்து கெடுத்து விட்டார்கள். நாங்கள் தினமும் சண்டை போடுவோம், பேசுவோம். நடிப்பை சொல்லிக் கொடுப்பார். சண்டை பயிற்சி அளிப்பார். அவரிடம் நிறைய அடி வாங்கி உள்ளேன். அப்படி சந்தோசமாக இருந்த மனிதர் இப்போது இப்படி இருப்பது மிகப்பெரிய கொடுமை” என் கண் கலங்கியவாறு கூறினார்.

- Advertisement -

சற்று முன்