- Advertisement -
Homeபொழுதுபோக்கு3 ஆண்டுகளுக்கு படத்தயாரிப்பை நிறுத்தி வைத்த கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி - இதுக்கு...

3 ஆண்டுகளுக்கு படத்தயாரிப்பை நிறுத்தி வைத்த கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி – இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்குதா?

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, தோனி பிலிம்ஸ் என்ற பெயரில் கடந்தாண்டு, படத்தயாரிப்பு நிறுவனம் துவங்கினார். முதலில் அவர் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நடிகர் விஜயை வைத்துதான் படம் இயக்க ஆசைப்பட்டார். ஏனெனில், இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பதால், விஜயை வைத்து முதல் படம் தயாரிக்க ஆசைப்பட்டார்.

ஆனால் விஜய் சில படங்களில் ஏற்கனவே கமிட் ஆகி பிஸியாக நடித்துக் கொண்டு இருந்ததால், தோனியின் விருப்பத்தை விஜயால் நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து, ஹரீஸ் கல்யாணை ஹீரோவாக வைத்து எல்ஜிஎம் என்ற படத்தை தோனி பிலிம்ஸ் தயாரித்தது.

ஆனால் இந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. முதல் படத்திலேயே மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதால், தோனிக்கு பலத்த ஏமாற்றம் ஏற்பட்டது. பயங்கர அப்செட் ஆன தோனி, இதுவரை அடுத்த படம் எதுவும் எடுக்காமல் இருந்து வருகிறார். ஹரீஸ் கல்யாண் நடித்த படம், இவ்வளவு மோசமான நஷ்டத்தை தரும் என தோனி எதிர்பார்க்கவில்லை,

இந்நிலையில், தோனி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இன்னும் 3 ஆண்டுகளுக்கு எந்த படத்தையும் தயாரிக்காது என, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தோனி ரசிகர்களிடையே, தமிழ் சினிமாத் துறையினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டில் பல வெற்றி தோல்விகளை பார்த்தவர், கூல் கேப்டன் என பெயர் பெற்ற மகேந்திர சிங் தோனி, ஒரு படத்தின் தோல்விக்கே இப்படி பின்வாங்கி விட்டாரே என்ற கேள்வியும் பலருக்கு எழுந்துள்ளது. முதல் படத்தில் தோல்வி ஏற்பட்டால், அடுத்தடுத்த படங்களை, நல்ல இயக்குநர்களை வைத்து நல்ல கதைகளாக எடுத்தால், நிச்சயம் வெற்றி கிடைக்கும் என சிலர் ஆலோசனை சொல்லியும் தோனி அதை ஏற்கவில்லை என்று தெரிகிறது.

அதே வேளையில், படத்தயாரிப்பில் இனி ஈடுபட போவதில்லை என அறிவிக்காமல் 3 ஆண்டுகளுக்கு படத்தயாரிப்பு இல்லை என்று தோனி பட நிறுவனம் கூறியிருப்பதற்கு காரணம் எதுவும் இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேளை 3 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய், தோனி பிலிம்ஸ்க்கு கால்ஷீட் தருவதாக கூறியிருக்கலாம். அதுவரை வேறு படங்கள் தயாரிக்க வேண்டாம் என தோனி தரப்பில் முடிவு செய்திருக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

சற்று முன்