- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜாவுக்கு வேற வேலையே இல்லையா? அவர் கேட்கிற அளவுக்கு நான் சம்பாதிக்கலே - மீண்டும் நடிகை...

இளையராஜாவுக்கு வேற வேலையே இல்லையா? அவர் கேட்கிற அளவுக்கு நான் சம்பாதிக்கலே – மீண்டும் நடிகை வனிதா விஜயகுமார் ஆவேசம்!

- Advertisement -

சமீபத்தில் நடிகை வனிதா விஜயகுமார் முதன்முறையாக டைரக்சன் செய்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படம் வெளியானது. இந்த படத்தில் அவரே கதாநாயகியாகவும் நடித்திருந்தார். ராபர்ட் மாஸ்டர் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தயாரித்திருந்தார். எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

அடல்ட் கன்டண்ட் ஸ்டோரி என்ற பெயரில் படம் முழுவதும் கவர்ச்சி மற்றும் ஆபாச காட்சிகள் நிறைந்திருந்தால் குடும்பத்துடன் இந்த படத்தை யாருமே பார்க்க முடியாது என்ற கடும் விமர்சனம் எழுந்தது. மேலும் இளையராஜா இசையில் உருவான ராத்திரி சிவராத்திரி பாடலை இதில் பயன்படுத்தியது மட்டுமின்றி, இளையராஜா புகைப்படத்தையும் பெயரையும் வனிதா விளம்பரங்களில் பயன்படுத்தியது பெரிய சர்ச்சையானது.

- Advertisement -

இளையராஜாவை நேரில் சந்தித்து அனுமதி பெற்றுதான் அந்த பாடலை பயன்படுத்தினேன் என படத்தின் இயக்குனர் வனிதா விஜயகுமார் கூறியிருந்தாலும், இந்த விவகாரத்தில் இளையராஜா கோர்ட்டில் வனிதா விஜயகுமார் மீது வழக்கு தொடர்ந்தார். இதில் ஆவேசமான வனிதா விஜயகுமார், இளையராஜா வீட்டுக்கு நான் மருமகளா போயிருக்க வேண்டியவ என்று சொன்னது இணையத்தில் வைரலாகி பரபரப்பானது.

இந்த சூழலில் தியேட்டரில் ரிலீஸான மிஸஸ் அண்ட் மிஸ்டர் படம் ஊத்திக்கொண்ட நிலையில் படத்தை டைரக்சன் செய்தது மட்டுமின்றி தனது மகள் ஜோவிகா பெயரில் தயாரித்த வனிதா விஜயகுமார் நொந்து நூலாகி போயிருக்கிறார். முதன்முறையாக ஒரு படத்தை டைரக்ட் செய்து தயாரித்து இப்படி தேவையற்ற விவகாரங்களில் சிக்கி பேசுபொருளாகி அசிங்கப்பட்டு விட்டோமே என்ற ஆதங்கத்தை சமீபத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து நடிகை வனிதா விஜயகுமார் கூறியதாவது, நாங்கள் சோனி நிறுவனத்திடம் முறையான அனுமதி வாங்கினோம். இளையராஜாவுக்கு நாங்கள் படத்தில் நன்றி கூறியிருந்தோம். ஆனால் அதில் அவருக்கு விருப்பமில்லை என்று தெரிந்தவுடன் அவருக்கு போட்டிருந்த நன்றி கார்டை எடுத்து விட்டோம். அவர் எனக்கு போன் செய்து, ஏம்மா எனது புகைப்படத்தை போட்டு இருக்கீங்க என்று கேட்டிருக்கலாம். அவருக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால் நான் என்னமோ திருடி மாதிரி அவர் ட்ரீட் செய்கிறார்.

இப்போது நான் ஒரு வாடகை காரில்தான் வந்தேன். அந்த டிரைவருக்கு இந்த பிரச்னை எல்லாம் தெரியும். அவர் என்னிடம், இளையராஜாவுக்கு வேற வேலையே இல்லையா என்று கேட்கிறார். அவர் வழக்கு போட்டது, ராஜாவுக்கு மரியாதையை கொடுக்கவில்லை என்பதை மட்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர் என்னிடம் போன் செய்து திட்டி இருக்கலாம். ஆனால் பணம் வேண்டும் என்று கேட்கிறார். அவருக்கு கொடுக்கும் அளவுக்கு நான் சம்பாதிக்கவில்லை என்று வனிதா விஜயகுமார் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்