- Advertisement -
Homeபொழுதுபோக்குநள்ளிரவில் வனிதா விஜயகுமார் மீது தாக்குதல், போலீசில் புகார் கொடுக்க மறுப்பு, விரைவில் மர்மங்கள் வெளிவரும்...

நள்ளிரவில் வனிதா விஜயகுமார் மீது தாக்குதல், போலீசில் புகார் கொடுக்க மறுப்பு, விரைவில் மர்மங்கள் வெளிவரும் என பரபரப்பை கௌப்பிய பயில்வான் ரங்கநாதன்

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமாரின் மூன்று மகள்களில் ஒருவர். சில ஆண்டுகளுக்கு முன் சொத்து பிரச்னையில், விஜயகுமாருடன் ரோட்டில் சண்டையிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்பவர்.

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், வீட்டுக்குள் பல விஷயங்களில் தகராறு, வாக்குவாதம் செய்து நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்கை பலமடங்கு ஏற்றினார். தேடிப்போய் பிரச்னைகளை ஏற்படுத்தி, அதையே பெரிய விவகாரமாக்குவதில் வனிதா விஜயகுமார் பயங்கரமானவர் என பார்வையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியவர்.

இப்போதும் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2 மாதங்களாக ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கிறது. இந்த முறை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்ததே, நான் வனிதா விஜயகுமாரின் மகள் என்பதை நிரூபிக்கும் விதமாக ஜோவிகாவும் பயங்கரமாக பிக்பாஸ் வீட்டுக்குள் வாக்குவாதம் செய்து வருகிறார்.

இந்நிலையில் தினமும் தனது மகள் பங்கேற்கும் பிக்பாஸ் குறித்து தனியார் யூடியூப் சேனலில் ரிவ்யூ கொடுத்து வரும் வனிதா விஜயகுமார், பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ள அனைத்து போட்டியாளர்கள் குறித்தும் தனது விமர்சனங்களை வைத்து வருகிறார். குறிப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் பற்றியும் கடுமையாக விமர்சிக்கிறார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன், பிக்பாஸ் ரிவ்யூ இன்டர்வியூ முடிந்த பிறகு, நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டுக்கு வந்த வனிதா விஜயகுமார், நடந்து சென்ற போது ஒரு மர்ம நபரால் தாக்கப்பட்டதாக புகைப்படத்துடன் ஒரு பதிவு வெளியிட்டார். அவர், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பிரதீப்பின் ஆதரவாளர் போல என்னிடம் பேசிவிட்டு தாக்கியதாக வனிதா விஜயகுமார் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இதுகுறித்து அவர் போலீசில் இதுகுறித்து புகார் அளிக்கவில்லை.

இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், வனிதா விஜயகுமார் தன்னை தாக்கிய நபர் குறித்து போலீசில் நிச்சயம் புகார் செய்திருக்க வேண்டும். யாராக இருந்தாலும் அதை தான் செய்வார்கள். ஆனால், அதை வனிதா விஜயகுமார் செய்ய மறுக்கிறார் ஒருவேளை தாக்கிய நபர், அவருக்கு தெரிந்தவராக இருந்தால் அது இன்னும் பல மோசமான விளைவுகளை, விமர்சனங்களை ஏற்படுத்தும் என அவர் நினைத்திருக்கலாம். இதன் பின்னணியில் நிறைய மர்மங்கள் இருக்க வாய்ப்புள்ளது. விரைவில் மர்மங்கள் வெளிவரும், என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

சற்று முன்