- Advertisement -
Homeபொழுதுபோக்குஹலோ பிரதர் அந்த சீன்லாம் இங்க இல்ல.. பணத்தை திருப்பி கொடுங்க.. ஞானவேல் ராஜாவை பங்கம்...

ஹலோ பிரதர் அந்த சீன்லாம் இங்க இல்ல.. பணத்தை திருப்பி கொடுங்க.. ஞானவேல் ராஜாவை பங்கம் செய்த சமுத்திரகனி

- Advertisement -

ஜப்பான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவோடு சேர்த்து கார்த்தி 25 நிகழ்ச்சியும் கொண்டாடப்பட்டது. கார்த்தியை திரைத்துறையில் அறிமுகப்படுத்திய அமீர் அந்த விழாவுக்கு செல்லவில்லை. அதுகுறித்து ஆரம்பித்த பேச்சு பருத்திவீரன் பஞ்சாயத்தில் கொண்டு போய் விட்டது. ஞானவேல் ராஜா அளித்த ஒரு பேட்டியில், அமீர் ஒரு திருடன். அவருக்கு வேலையே தெரியாது. எனது பணத்தில்தான் வேலை கற்றுக்கொண்டார். தோற்றுப்போன குதிரை என்று சகட்டுமேனிக்கு பேசினார்.

அவரது பேச்சுக்கு அமீர் சரியான பதிலடி கொடுத்தார். அவரது அறிக்கைக்கு அடுத்து சசிகுமார் பருத்திவீரனுக்கு தானும் பணம் கொடுத்தேன். ஞானவேல் ராஜா ஒன்றுமே செய்யவில்லை என்று அமீருக்கு ஆதரவு தெரிவித்தார். அதேபோல் சமுத்திரகனியும் ஆதரவு தெரிவித்தார். அவர்களைத் தொடர்ந்து பொன்வண்ணன், கரு.பழனியப்பன், பாரதிராஜா ஆகியோரும் அமீர் பக்கம் நின்றார்கள்.

- Advertisement -

சூழல் இப்படி இருக்க கரு.பழனியப்பன் வெளியிட்டிருந்த அறிக்கையில், ஞானவேல் மன்னிப்பு கேட்க வேண்டும் என சிவக்குமார் சொல்ல வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அதனையடுத்து ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்தார். அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “பருத்திவீரன் பிரச்னை கடந்த 17 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. நான் இதுநாள்வரை அதை பற்றி பேசியதில்லை. என்றைக்குமே அமீர் அண்ணா என்றுதான் குறிப்பிடுவேன். அவரது குடும்பத்தினரிடமும் நெருங்கி பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டுக்கள் என்னை காயப்படுத்தியுஅது.

அதற்கு பதிலளிக்கும்போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் நான் அதற்கு மனபூர்வமாக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். எனனி வாழ வைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் நான் மதிப்பவன்” என கூறியிருந்தார். அந்த அறிக்கைக்கு பதிலடி கொடுத்த சசிகுமார் இது போலி வருத்தம் என்று ஒரே போடாக போட்டார்.

- Advertisement -

இந்நிலையில் சமுத்திரகனியும் ஞானவேல் ராஜாவின் வருத்தத்துக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பிரதர் இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்கே செல்லாது. நீங்கள் செய்ய வேண்டியது எந்த பொது வெளியில் எகத்தாளமாக உட்கார்ந்துக்கிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்றை வாரி இறைச்சீங்களோ அதே பொது வெளியில் வந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்

நீங்க கொடுத்த அந்த கேவலமான தரங்கெட்ட பேட்டியை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும். அன்னைக்கு கொடுக்காம ஏமாத்ஹ்டிட்டு போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திரும்பி கொடுக்கணும். ஏனா கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பி கொடுக்க வேண்டியது இருக்கு. அப்புறம் பருத்திவீரன் திரைப்படத்துல வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம் அவங்க.. எல்லோரும் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேலை பார்த்தவங்க.. நீங்கதால் அம்பானி பேமிலியாச்சே.. காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதி” என குறிப்பிட்டுள்ளார்

- Advertisement -

சற்று முன்