- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை அதனால்தான் இழந்தேன், திகில் பட டைரக்டரே இப்படி உருட்டினா...

விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை அதனால்தான் இழந்தேன், திகில் பட டைரக்டரே இப்படி உருட்டினா எப்படீங்க? – கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் பொன் முட்டை இடும் பறவையாக கருதப்படுகிறார். அவரது நடிப்பில் வெளியாகும் படம் என்றால் அது தோல்வி படமாக இருந்தாலும் கூட பலமடங்கு லாபத்தை தயாரிப்பாளருக்கு தந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. அந்தளவுக்கு அவரது படங்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களாக இருக்கின்றன. லியோ படம் கூட விஜயை தவிர யார் நடித்திருந்தாலும் 3 நாட்கள் கூட ஓடியிருக்காது.

விஜய் படங்கள் வெற்றி பெற முக்கிய காரணம், சினிமாவை பொருத்தவரை ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கும், வரவேற்பும் கிடைத்துவிட்டால் அதுவே அவர்களுக்கு பெரிய பெரிய வெற்றிகளை தேடித் தந்து விடும். அதனால்தான் எம்ஜிஆர், ரஜினி நடித்த படங்கள் சாதாரண கதைகளாக இருந்தாலும், வசூலில் சக்கை போடு போட்டன.

- Advertisement -

உதாரணமாக எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டுப்பிள்ளை, படகோட்டி, குடியிருந்த கோயில், இதயக்கனி படங்கள் எல்லாம் சாதாரண கதைகளாக இருந்தாலும், அது எம்ஜிஆர் நடித்த படம் என்பதுதான் ஸ்பெஷல். அதுபோல் முரட்டுக்காளை, வேலைக்காரன், ராஜாதி ராஜா, மனிதன் படங்கள் எல்லாமே சாதாரண படங்கள்தான். ஆனால் அது ரஜினி நடித்த படம் என்பதுதான் ஸ்பெஷல். இப்போது அந்த வரிசையில் இருப்பவர் நடிகர் விஜய். அவர் நடித்த படம் என்பதே ஸ்பெஷலாக இருப்பதால் விஜய் படங்கள் வசூலில் சக்கை போடு போடுகின்றன.

இந்நிலையில் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய அஜய்ஞானமுத்து, விக்ரம் நடித்த கோப்ரா படத்தையும் இயக்கியிருந்தார். இப்போது அவரது இயக்கத்தில் டிமாண்டி காலனி 2ம் பாகமாக வெளிவருகிறது. நாளை இந்த படம் ரிலீஸ் ஆகிறது. படத்தின் பிரமோவுக்காக பல நிகழ்ச்சிகளில் அஜய் ஞானமுத்து பங்கேற்று பேசி வருகிறார்.

- Advertisement -

அப்போது அவர் கூறியதாவது, துப்பாக்கி படத்தில் விஜய் நடித்த போது, நான் உதவி இயக்குனராக அதில் பணிபுரிந்தேன். அப்போது எனக்கும் அவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. நான் டிமாண்டி காலனி படத்தை இயக்கிவிட்டு அவரை சந்தித்த போது, படம் ஹிட் ஆனதற்கு வாழ்த்துகள் சொன்னார். படத்தை பார்த்துவிட்டு, வேறு கதை இருந்தால் சொல் அஜய், நாம் சேர்ந்து படம் பண்ணலாம் என்றும் விஜய் என்னிடம் சொன்னார்.

அதன்பிறகு 3 மாதங்களில் ஒரு கதையை ரெடி செய்துக்கொண்டு அவரை சந்தித்தேன். ஆனால் என்னால் அவரிடம் கதையை சரியாக சொல்ல முடியவில்லை. அதற்கு காரணம் என் பயம்தான். அவரது தீவிர ரசிகனாக இருந்ததால் கதையை கவனம் செலுத்தி சொல்ல முடியவில்லை என்று கூறியிருக்கிறார். டிமாண்டி காலனி திகில் பட டைரக்டர் விஜயை பார்த்து பயப்படலாமா, என பலரும் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்