- Advertisement -
Homeபொழுதுபோக்குபழசை எல்லாம் இப்படி மறந்துட்டாங்களே? மீண்டும் வாய்ப்பு தேடி வந்த மைனா பட நடிகைக்கு இப்படி...

பழசை எல்லாம் இப்படி மறந்துட்டாங்களே? மீண்டும் வாய்ப்பு தேடி வந்த மைனா பட நடிகைக்கு இப்படி ஒரு ஏமாற்றமா? – விஐபி கூட கண்டுக்கலையா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் மைனா படம் மூலம் அறிமுகமானவர் அமலா பால். இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய இந்த படத்தில் மைனா என்ற கேரக்டரில் கதாநாயகியாக அமலாபால் நடித்திருந்தார். இந்த படத்தில் நாயகனாக விதார்த் நடித்திருந்தார். படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அமலா பாலுக்கு இந்த படம் பெரிய அடையாளத்தை பெற்றுத் தந்தது.

தொடர்ந்து தமிழில் மற்றும் தெலுங்கு மலையாளம் என பல படங்களில் அமலாபால் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். குறிப்பாக தமிழில் தலைவா வேலையில்லா பட்டதாரி ( விஐபி) வேலையில்லா பட்டதாரி 2 ( விஐபி 2) காதலில் சொதப்புவது எப்படி வேட்டை பாஸ்கர் ஒரு ராஸ்கல் தெய்வத் திருமகள் திருட்டுப்பயலே 2 ராட்சசன் நிமிர்ந்து நில் அம்மா கணக்கு ஆடுஜீவிதம் ஆடை என பல படங்களில் அமலா பால் நடித்திருந்தார்.

- Advertisement -

இதில் பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக இருந்தன. ஒரு கட்டத்தில் தலைவா தெய்வத் திருமகள் படங்களை இயக்கிய இயக்குனர் ஏஎல் விஜயை காதல் திருமணம் செய்துக்கொண்டார். பிறகு அவரை பிரிந்து விவாகரத்து பெற்றார். நடிகை அமலாபால் பல காட்சிகளில் ஆடையின்றி நடித்த ஆடை படம் பெரிய அளவில் பேசப்பட்டது. கடும் சர்ச்சையிலும் அவர் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கோவாவை சேர்ந்த தொழிலதிபர் 2 ஆண்டுகளுக்கு முன் அமலாபால் திருமணம் செய்துக்கொண்ட நிலையில் பிள்ளையும் பெற்று விட்டார். அந்த குழந்தைக்கு இலை என அமலாபால் பெயரிட்டதும் இணையத்தில் வைரலானது. இந்த சூழலில் அமலா பால் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி தர விரும்பியிருக்கிறார்.

- Advertisement -

இதற்காக நடிகை அமலா பால் சென்னைக்கு வந்து சில வாரங்கள் தங்கியிருக்கிறார். கோலிவுட்டில் அவருடன் நடித்த பழைய ஹீரோக்கள் மற்றும் அவரை வைத்து படம் இயக்கிய இயக்குனர்கள் சிலரை அவர் தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். ஆனால் யாருமே அவருக்கு அப்பாயின்ட்மென்ட் தராமல் அலட்சியப்படுத்தி உள்ளனர்.

குறிப்பாக விஐபி விஜபி 2 படங்களின் நாயகன் நடிகர் தனுஷூம் அமலாபாலை கண்டுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாஜி நாயகி அமலாபால், ஒரு காலத்தில் என்னுடன் கூடி கும்மியடித்தவர்கள் எல்லாம் இப்படி நன்றி மறந்தவர்களாக மாறி விட்டார்களே, என்று தனது நெருங்கிய தோழியான சக நடிகை ஒருவரிடம் புலம்பிவிட்டு சென்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்