- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் குடும்ப வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய அந்த நடிகை யார்? - விவகாரத்து மனுவில்...

நடிகர் விஜய் குடும்ப வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய அந்த நடிகை யார்? – விவகாரத்து மனுவில் எச்சரித்த விஜய் மனைவி சங்கீதா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் உச்ச நட்சத்திர நடிகர் விஜய். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் குடும்பத்தை விட்டு பிரிந்து தனித்து இருக்கிறார். அவரது மனைவி சங்கீதா மகன் ஜேசன் சஞ்சய் மகள் திவ்யா சாஷா என யாருமே அவருடன் இல்லை. அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் அம்மா ஷோபா சந்திரசேகர் கூட விஜயுடன் இல்லை என்று தகவல் இருந்தது.

சென்னையில் திருவான்மியூர் நீலாங்கரை பங்களாவில் விஜய் தனித்து வாழ்ந்து வருகிறார். அவரது பங்களாவில் அவருக்கு சேவை செய்ய சமையல்காரர் டிரைவர் உதவியாளர் வேலைக்கார்கள் தான் உள்ளனர். கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே விஜய் தனிமையில் இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் பரவியது.

- Advertisement -

ஆனால் இப்படி இணையத்தில் வெளியான தகவல்கள் அனைத்துமே உண்மைதான் என்பதை இன்று விஜயின் மனைவி சங்கீதா உறுதி செய்துவிட்டார். சென்னையை அடுத்து உள்ள செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்த சங்கீதா, அந்த மனுவில் விஜய் தனக்கு செய்த துரோகத்தையும் அதற்கு காரணமாக ஒரு நடிகை இருந்தார் என்பதையும் பகிரங்கமாக கூறியிருக்கிறார்.

விவாகரத்து கேட்டுள்ள அந்த மனுவில் விஜயின் மனைவி சங்கீதா பல விஷயங்களை கொட்டி தீர்த்திருக்கிறார். அதில் மிகவும் முக்கியமாக அவர் கூறியிருப்பதாவது, என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அந்த நடிகை அடிக்கடி வெளியிடுவது எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் பெரிய அவமானத்தை தருகிறது. மன உளைச்சலும் எங்களுக்கு ஏற்பட்டது.

- Advertisement -

தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் அந்த நடிகையையும் இந்த வழக்கில் 2வது எதிர்மனுதாரராக சேர்ப்பேன். எனது கணவர் விஜய் தரப்பில் இருந்து எனக்கு நெருக்கடி அழுத்தம் கொடுக்கபட்டால் அந்த நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை கோர்ட்டில் வழங்குவேன் என்றும் விஜயின் மனைவி சங்கீதா அந்த மனுவில் கூறியிருக்கிறார்.

விஜயின் மனைவி சங்கீதா குறிப்பிடும் அந்த நடிகை யார் என்பது ரசிகர்கள் பலருக்கும் தெரிந்ததுதான். அந்த நடிகை இன்னும் 40 வயதுகளை கடந்தும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். நடிகை நயன்தாராவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் அவர்தான். விரைவில் அவரது பெயரையும் சங்கீதா வெளிப்படையாக கூற அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இந்த திடீர் பூகம்பத்தால் விஜயின் அரசியல் ஆட்டம் தான் களை இழந்து போயுள்ளது.

- Advertisement -

சற்று முன்