- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சிம்பு திருமணம் குறித்து பகிரங்கமாக பேசிய பிரபல சீரியல் நடிகை, போடு வெடிய -...

நடிகர் சிம்பு திருமணம் குறித்து பகிரங்கமாக பேசிய பிரபல சீரியல் நடிகை, போடு வெடிய – தலைவா என்ன இதெல்லாம்?

- Advertisement -

நடிகர் சிலம்பரசன், தமிழ் திரையுலகில் அஷ்டவதானி என்று புகழப்படும் டி ராஜேந்தரின் மூத்த மகன். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், பாடகர், இசை, டைரக்‌ஷன், தயாரிப்பு என எட்டு விஷயங்களிலும் புகுந்து விளையாடும் திறமையாளராக வெற்றி பெற்றதால், டி ராஜேந்தர் அஷ்டவதானி என்று அழைக்கப்படுகிறார்.

கடந்த 1980களில் டி ராஜேந்தர் படம் என்றால், தியேட்டர்களில் ரசிகர் கூட்டம் அலைமோதும். ஒரு தலை ராகம், ரயில் பயணங்களில், கிளிஞ்சல்கள், உயிருள்ள வரை உஷா, தங்கைக்கோர் கீதம், உறவைக் காத்த கிளி, சம்சார சங்கீதம் என பல மெகா ஹிட் படங்களை தந்தவர்.

- Advertisement -

தந்தையை போலவே மகன் லிட்டில் சூப்பர் ஸ்டார் எஸ்டிஆர் என அழைக்கப்படும் சிலம்பரசனும், நடிப்பில் படுகெட்டிக்காரராக இருக்கிறார். டைரக்‌ஷன், பாட்டு, இசை என அவரும் பல படங்களில் ரசிகர்களை அசத்திக் கொண்டு இருக்கிறார். இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் படத்தில் நடித்து வருகிறார்.

சிம்புவுக்கு இப்போது வயது 41 கடந்துவிட்டது. ஆனால் இன்னும் அவர் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. அவரது பெற்றோர் டி ராஜேந்தர் மற்றும் உஷா அவருக்கு வரன் தேடிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் இன்னும் மணப்பெண் முடிவாகவில்லை. சிம்புவுக்கு எப்போது திருமணம் என்பது ஒரு டிரண்டிங் கேள்வியாக மாறி, அவரிடம் அடிக்கடி நேரிலும் கேட்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்நிலையில், பிரபல சீரியல் நடிகை ரேமா அசோக், சிம்புவின் திருமணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். கல்யாணம் முதல் காதல் வரை, சின்னதம்பி, நாச்சியார்புரம் போன்ற சீரியல்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ரேமா அசோக்.

அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் ரேமா அசோக் நடப்பது, நிற்பது, சிரிப்பது, சிறிய நடன அசைவுகளுடன் ஒரு மாடலிங் போல வீடியோ வெளியிட்டுள்ள அவர், சிம்புவுக்கு திருமணம் ஆகும்போதுதான் எனக்கும் திருமணம் என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அந்த கல்யாணம் மட்டும் நல்லா யோசி, நல்லா இருக்குமடா என்ற கேப்சனும் போட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்