- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்பாவி கணவர் நாக சைதன்யாவை ஏன் ஏமாத்துனீங்க?, ரசிகரின் அதிரடியான கேள்விக்கு வேற லெவலில் பதில்...

அப்பாவி கணவர் நாக சைதன்யாவை ஏன் ஏமாத்துனீங்க?, ரசிகரின் அதிரடியான கேள்விக்கு வேற லெவலில் பதில் சொன்ன நடிகை சமந்தா

- Advertisement -

நடிகை சமந்தா, தமிழில் தெலுங்கில் மலையாளத்தில் கன்னடத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் ஒரு சிறந்த அழகான நடிகையாக இருக்கிறார். தமிழில் அவர் நடித்த மெர்சல், கத்தி, தெறி, நான் ஈ, காத்து வாக்குல ரெண்டு காதல், தங்கமகன், சீமராஜா, அஞ்சான் என பல படங்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களாக இருந்திருக்கின்றன.

தெலுங்கில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த போது தெலுங்கு நட்சத்திர தம்பதியான நாகர்ஜூனா – அமலா ஆகியோரின் மகன் நாகசைதன்யாவை, கடந்த 2017ம் ஆண்டில் காதலித்து சமந்தா திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் 2021ம் ஆண்டில் இருவரும் பிரிந்து விட்டனர். சினிமாவில் நடிக்க சமந்தாவுக்கு அனுமதி மறுத்ததால் அவர் நாக சைதன்யாவை விட்டு விலகியதாக கூறப்படுகிறது.

- Advertisement -

எனினும் திருமண முறிவு ஏற்பட்டாலும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டிய சமந்தா, புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தார். தொடர்ந்து யசோதா, குஷி, வெப் சீரிஸ் சிட்டாடல் போன்றவற்றில் நடிக்க கமிட் ஆன நிலையில், மயோசிடிஸ் என்ற தோல் அழற்சி நோய் பாதிப்பில் சிக்கினார். அந்த நோயில் இருந்து இன்னும் முழுமையாக வெளிப்பட முடியாமல் சிகிச்சை பெற்றபடியே நடித்து வருகிறார்.

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருந்து வரும் சமந்தா, சமீபத்தில் உடல் ஆரோக்கியம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். மேலும் அதில் யோகா குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு, யோகா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, தனது வாழ்க்கையில் யோகாவின் பங்கு என்ன என்பது குறித்தும் அதில் சமந்தா சில விஷயங்களை வெளிப்படையாக சொல்லி இருந்தார்.

- Advertisement -

இதற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவித்த நிலையில், ஒரு ரசிகர் திடீரென சம்பந்தமே இல்லாமல், உங்களது அப்பாவி கணவர் நாக சைதன்யாவை நீங்கள் ஏன் ஏமாற்றுனீர்கள்? அதை பற்றி சொல்லுங்கள் என்று பகிரங்கமாக ஒரு கேள்வியை பதிவு செய்தார்.

இதற்கு பதிலளித்த நடிகை சமந்தா, மன்னிக்கவும். நான் வீடியோவில் பேசியிருக்கும் விஷயங்கள் உங்களுக்கு உதவாது என்று நினைக்கிறேன். இதை விட உங்களுக்கு இன்னும் வலிமையான விஷயம் தேவைப்படும். நன்றாக இருங்கள் என்று பதில் சொல்லி இருக்கிறார். அதாவது அவர் யோகா குறித்து பேசிய விஷயத்தை தவிர்த்து கேள்வி கேட்ட அந்த நபருக்கு, அதே பாணியில் நேரடி பதில் சொல்லாமல், நீங்க வேற வேலையை பாருங்க என அருமையாக பதிலடி தந்துள்ளார் சமந்தா என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்