- Advertisement -
பிரபாஸ் ரன்பீர் கபூர் யஷ் போன்ற பான் நட்சத்திர ஹீரோக்களை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்பவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தை பிரசாந்த் நீல் இயக்கப் போவதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே நடிகர் அஜீத்குமார் நடிக்கும் படத்தை பிரசாந்த் நீல் இயக்குவதாகவும் ஒரு வதந்தி பரவியது. அதே போல் இதுவும் ஒரு வதந்தி தான் என்றும் ஒருவேளை பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் ஒரு கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிக்கலாமே தவிர, அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தை பிரசாந்த் நீல் இயக்க வாய்ப்பே இல்லை என்றும் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.





