தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. பின் நடிகராகி பல நல்ல படங்களில் நடித்தார். திமிரு புடிச்சன், பிச்சைக்காரன் போன்ற படங்களில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. படங்களில் மட்டுமின்றி, இவரது மேடை பேச்சுகள், நேர்காணல்களில் கூட ஒரு பண்பட்ட மனிதராக, தன் சிந்தனைகளை வெளிப்படுத்துவார். நல்ல நடிகராக, சிறந்த மனிதராக மக்களால் அறியப்பட்டவர்.
சில தினங்களுக்கு முன், யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென ஒரு மோசமான சம்பவம், விஜய் ஆண்டனி வீட்டில் நடந்தது.விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது
திரையுலகினர் மட்டுமின்றி, கேள்விபட்ட பலரையும் மனதை வேதனைப்பட செய்தது.
விஜய் ஆண்டனி மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டுள்ள பலரும், உறவினர்களும், நண்பர்களும், திரையுலகம் சார்ந்தவர்களும், குறிப்பாக அவரது ரசிகர்களும், விஜய் ஆண்டனியின் குடும்பத்தில் நடந்த இந்த சோகமான ஒரு நிலைக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். என்றாலும், மகளின் இறுதி சடங்குகளை செய்து விட்ட நிலையில், விஜய் ஆண்டனி அறிக்கையாக, ஒரு கடிதம் வெளியிட்டு இருக்கிறார்.
அந்த கடிதத்தில், அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள், அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குதான் சென்று இருக்கிறாள்.
என்னிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறாள்
அவளுடன் நானும் இறந்து விட்டேன்.
நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன்.
அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள் – உங்கள் விஜய் ஆண்டனி
இவ்வாறு, அந்த கடிதத்தில் விஜய் ஆண்டனி, தன் புண்பட்ட உணர்வுகளை வார்த்தைகளாக தந்திருக்கிறார். ஒரு அன்பு நிறைந்த தந்தையாக, தன் மகளை பறிக்கொடுத்த வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் எழுதிய வாசகங்களை படிக்கும் பலரும், அவரது தவிப்பின் நிலை உணர்ந்து வருந்துகின்றனர். இந்த கடிதம், இப்போது வைரலாகி வருகிறது.





