- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமார் படத்தை இயக்க முன்வந்த துபாய் பணக்கார நண்பர், ஏகே போட்ட ஒரே கண்டிஷன் -...

அஜீத்குமார் படத்தை இயக்க முன்வந்த துபாய் பணக்கார நண்பர், ஏகே போட்ட ஒரே கண்டிஷன் – தலை தெறித்து ஓடிய அந்த புது தயாரிப்பாளர்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடந்த ஆண்டின் துவக்கத்தில் விடாமுயற்சி குட் பேட் அக்லி என 2 படங்கள் வௌியானது. இந்த 2 படங்களும் 2 ஆண்டுகள் கழித்துதான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. துணிவு படத்துக்கு பிறகு 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் அஜீத்குமார் நடித்த எந்த படமும் வெளியாகவில்லை.

இப்போது கடந்த ஆண்டில் இந்த 2 படங்களை தொடர்ந்து ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் அடுத்த படம் ஷூட்டிங் துவங்கப்படாமல் இருந்து வருகிறது. அஜீத்குமார் நடிக்கும் ஏகே 64 படத்தை இயக்கப் போவது ஆதிக் ரவிச்சந்திரன் என்பது உறுதியான நிலையில் இன்னும் தயாரிப்பாளர் முடிவாகவில்லை.

- Advertisement -

ஆனால் பிப்ரவரியில் படப்பிடிப்பு துவங்கி விடும் என்று ஆதிக் ரவிச்சந்திரன் உறுதியாக கூறி வருகிறார். அஜீத்குமார் 184 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதால் எந்த தயாரிப்பாளரும் இந்த படத்தை தயாரிக்க முன்வரவில்லை. அவ்வளவு அதிக சம்பளம் தந்து படம் எடுத்தால் மார்க்கெட்டில் அஜீத்குமார் படம் அவ்வளவு வசூல் தராது என்பதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

இந்நிலையில் துபாயில் நடிகர் அஜீத்குமாருக்கு சில பணக்கார நண்பர்கள் சமீபத்தில் அறிமுகமாகி நெருங்கி பழகி வருகின்றனர். அவர் துபாயில் சொந்தமாக வீடு வாங்கி விட்டதால் அவரும் பல மாதங்களாக குடும்பத்துடன் அங்கே இருப்பதால் பல புதிய நண்பர்கள் அவருடன் பழகி வருகின்றனர். அதில் வசதியான சினிமா ஆர்வம் கொண்ட சில நண்பர்களுடன் அஜீத்குமார் பழகி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் ஏகே 64 படம் குறித்து தனது துபாய் நண்பருடன் அஜீத்குமார் பேசியிருக்கிறார். சம்பளத்தை 185 கோடி ரூபாய் என்பதில் இருந்து 170 கோடி ரூபாயாக குறைத்துக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார். இதற்கு நண்பர் சம்மதம் தெரிவித்த நிலையில் அஜீத்குமார் அடுத்து ஒரு புது கண்டிஷன் போட்டிருக்கிறார்.

அதாவது படத்தின் லாபத்தில் 50 சதவீதம் தனக்கு பங்கு தர வேண்டும் என்று தனது நண்பரிடம் கேட்டிருக்கிறார். இதனால் அரண்டு போன அந்த பணக்கார நண்பர், நாம் நண்பர்களாகவே இருப்போம். சினிமா தயாரிப்பு எல்லாம் வேண்டாம் என்று தலைதெறிக்க அங்கிருந்து ஓடியிருக்கிறார். இப்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடம் அஜீத்குமார் தரப்பு பேசி வருவதாக தெரிகிறது.

- Advertisement -

சற்று முன்