- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி விஜய்யிடம் 2 முறை கதை கூறினேன்... ஆனால் அவருக்கு பிடிக்கவே இல்லை... முன்னணி இயக்குனர்...

தளபதி விஜய்யிடம் 2 முறை கதை கூறினேன்… ஆனால் அவருக்கு பிடிக்கவே இல்லை… முன்னணி இயக்குனர் குமுறல்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் இருந்தாலும் அவற்றில் சில பேர் தான் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டு முன்னணி இயக்குனர்களாக வலம் வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் கார்த்திக் சுப்புராஜ்.

நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் குறும்படங்களை எடுக்க ஆரம்பித்து, தனது திறமையை வளர்த்துக் கொண்ட அவர் பீட்சா திரைப்படத்தின் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமானார். அதில் ஹாரர் திரைப்படத்தையே வேறொரு ஜானரில் கொடுத்ததால் பலராலும் கவனிக்கப்பட்டார் கார்த்திக் சுப்புராஜ்.

தமிழ் சினிமாவுக்கு மிக புதுமையாக அந்த படம் இருக்க, அடுத்ததாக ஜிகர்தண்டா திரைப்படத்தை அவர் இயக்கினார். கார்த்திக் சுப்புராஜின் முழு சினிமா திறமையையும் அறிய வேண்டும் என்றால் இந்த ஒரு திரைப்படத்தை பார்த்தால் போதும் என்று கூறலாம். அந்த அளவுக்கு மேக்கிங்கிலும் திரைக்கதையிலும் சுவாரசியமாக இருந்த இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.

இதில் அசால்ட் சேதுவாக வாழ்ந்திருந்த பாபி சிம்ஹா, தனது திறமையான நடிப்பின் மூலம் தேசிய விருதை தட்டிச் சென்றார். இதன் பிறகு அவர் எடுத்த இறைவி, மெர்க்குரி ஆகிய தோல்வி படங்களை கொடுத்தார். இதன் நடுவே தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வந்த அவர், மேயாத மான் படத்தை எடுத்தார்.

தான் எங்கு சென்றாலும் ரஜினி ரசிகராகவே காட்டிக் கொள்ளும் கார்த்திக் சுப்புராஜூக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பேட்ட திரைப்படம் உருவாக அந்த திரைப்படம் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. படம் முழுக்க தான் ரஜினி ரசிகன் என்பதை சீனுக்கு சீன் காட்டி இருந்தார் கார்த்திக் சுப்புராஜ். தற்போது அவர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படம் வரும் தீபாவளியன்று வெளியாகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த அவர், விஜய்யுடன் இணைவதை பற்றி கூறினார். தளபதி விஜயிடம் நான் இதுவரை இரண்டு முறை கதை கூறி இருக்கிறேன். ஆனால் அது அவருக்கு பிடிக்கவில்லை. எனக்கு அந்த அளவு கதையை கூற நன்றாக வராது. அவருக்கு பிடிக்கும் வகையில் நல்ல கதையை எழுதி விரைவில் அவர் உடன் இணைவேன் என எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.

சற்று முன்