- Advertisement -
Homeபொழுதுபோக்குவசூலில், தொழில்நுட்பத்தில் வேற லெவலில் சம்பவம் செய்த தமிழ் சினிமா - இதில் தரமற்ற படங்களை...

வசூலில், தொழில்நுட்பத்தில் வேற லெவலில் சம்பவம் செய்த தமிழ் சினிமா – இதில் தரமற்ற படங்களை உருவாக்கிய இயக்குநர்கள் பதில் சொல்வார்களா?

- Advertisement -

அரிச்சந்திரா நாடகம் பார்த்துதான் வாழ்க்கையில் எப்போதும் பொய் பேசக்கூடாது என்று மகாத்மா காந்தியடிகள் மனதில் உறுதி செய்துக்கொண்டதாக கூறுவார்கள். அதே கதையில் சிவாஜிகணேசன் அரிசசந்திரனாக நடித்த போதும், அதை பார்த்த ரசிகர்கள் அந்த காலத்தில் உண்மையின் மகத்துவத்தை உணர்ந்தனர்.

கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் எம்ஜிஆர் சிவாஜி நடித்த படங்களில் அன்பு, காதல், வீரம், குடும்ப பாசம், வெற்றி தோல்விகள், சமுதாய பிரச்னைகள், பொருளாதார பிரச்னைகள் என சகலமும் கலந்து சொல்லப்பட்டன. ஒரு சினிமா பார்ப்பது ஒரு வாழ்க்கை கதையை பார்ப்பதாக இருந்தது. அதில் நியாய தர்மங்கள் ரசிகர்களுக்கு சொல்லப்பட்டன.

- Advertisement -

ஆனால் இன்று கமர்ஷியல் சினிமா என்ற பெயரில் தமிழ் சினிமாவில் இருப்பது வன்முறை, வன்முறை ஒன்று மட்டுமே. இப்போதைய தமிழ் இயக்குநர்களில் மிக முக்கியமான இளம் இயக்குநர் என பெயர் எடுத்த லோகேஷ் கனகராஜ் படங்களில் இருப்பது போதைப் பொருள் கடத்தில், வன்முறை, ரத்தம், துப்பாக்கி, சண்டை இவைகள் மட்டும்தான்.

அவரது ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த முதல் படமான பைட் கிளப் படத்துக்குச் சென்றால், தியேட்டர் ஸ்கிரீனில் மட்டுமல்ல, தியேட்டர் முழுக்கவே கஞ்சா புகைக்குள் அமர்ந்திருக்கிற உணர்வுதான் ரசிகர்களுக்கு கிடைக்கும். இவர் டிரக் ப்ரீ சொசைட்டி உருவாக்குவதை விட, லோகேஷ் கனகராஜ் டிரக்ட் ப்ரீ மைண்ட் செட்டுக்கு வந்தால், தமிழ் சினிமா இவரிடம் இருந்து காப்பாற்றப்படலாம்.

- Advertisement -

நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், ஜெயிலர் படங்களில் இருந்தது வன்முறை மட்டும்தான். குழந்தைகள், பெண்கள் ரசிக்க முடியாத படங்களை தரும் இந்த இயக்குநர்களை தான் தமிழ் சினிமா கொண்டாடுகிறது. லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்றவர்களுக்கு தான் ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்றவர்கள் தங்களது படங்களை இயக்க வாய்ப்பு தருகின்றனர்.

தொழில்நுட்பத்தில் வசூலில் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவுக்கு தமிழ் சினிமா முன்னேறியிருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சிதான். ஆனால் கதையில், தரத்தில், ரசனையில் தமிழ் சினிமா போன்ற மிக மிக மோசமான ஊடகமாக பின்னோக்கி போய்க்கொண்டே இருக்கிறது. வரும் 2024ம் ஆண்டிலாவது தரமான கதைகள், மக்களுக்கான படங்களை எடுக்க இயக்குநர்கள் முன்வர வேண்டும். சம்பளத்தை கவனத்தில் கொள்ளாமல் நல்ல படங்களில் நடிக்க பெரிய ஸ்டார்களும் முன்வந்தால் தமிழ் சினிமாவை வரும் ஆண்டில் எப்படியாவது காப்பாற்றி விடலாம்.

- Advertisement -

சற்று முன்