- Advertisement -
Homeபொழுதுபோக்கு2023ல் வெளிவந்த படங்களில் மக்கள் மனதில் நின்ற படங்கள் இந்த இரண்டும்தான் - மத்ததெல்லாம் சும்மா...

2023ல் வெளிவந்த படங்களில் மக்கள் மனதில் நின்ற படங்கள் இந்த இரண்டும்தான் – மத்ததெல்லாம் சும்மா வெறும் அலப்பரைதான்

- Advertisement -

தமிழ் சினிமா பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிற ஒரு தொழிலாக முதலில் பார்க்கப்படுகிறது. படம் பார்க்க வரும் ரசிகர்களுக்குதான் சினிமா பொழுதுபோக்கே தவிர, சினிமா தொழிலில் ஈடுபட்டு இருக்கும் ஸ்டார் நடிகர் முதல் – லைட்பாய் வரை அதுதான் அவர்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது.

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், சில முக்கிய நடிகர்கள் எவ்வளவு உயரத்தை அடைந்த பின்னாலும், ஒவ்வொரு நாளும் கேமரா முன் நிற்கும்போது புதிய அறிமுக நடிகர் போலவே பீல் செய்து, டைரக்டர் சொன்னபடி நடிப்பார்களாம். ஏனெனில் இத்தனை உயரம் தொட காரணமாக இருக்கும் அந்த சினிமாவை அவர்கள் மதிக்கும் விதம், மரியாதை தரும் விதமாக அது இருக்கிறது.

- Advertisement -

ஆனால் சில நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ரசிகர்களை ஏமாற்றி, திரை ஜாலங்களை மட்டுமே காட்டி கதையே இல்லாத படங்களை எடுத்து நூற்றுக்கணக்கான கோடிகளில் லாபம் சம்பாதிப்பது, தமிழ் சினிமாவில் நடந்துக்கொண்டே இருக்கிறது. இதில் லியோ, ஜெயிலர் போன்ற படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

குற்றவாளி மகனை சுட்டுக்கொல்லும் தந்தை கதை, 50 ஆண்டுகளுக்கு முன் தங்கப்பதக்கம் படத்திலேயே சிவாஜி நடித்துவிட்டார். லியோ படத்தின் ஆள் மாறாட்டம் கதை, எம்ஜிஆர் காலத்தில் இருந்தே இருக்கிறது. இந்த மொக்கை படங்கள் வசூலித்தது ரூ. 500 கோடிகளுக்கு மேல் என்றால் அது ரஜினி, விஜய் நடித்த படங்கள் என்பது மட்டுமே தவிர, வேறொன்றுமே இந்த படங்களில் இல்லை. இந்த டம்மி கதை படங்களை இயக்கியதற்காக நெல்சன், லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குர்களை தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாக கருதுவது நல்ல ரசிகனுக்கு அழகல்ல.

- Advertisement -

ஆனால் நல்ல கதையம்சம் உள்ள சிறந்த படங்களை பொதுவான தமிழ் சினிமா ரசிகர்கள் தவற விடுவதே இல்லை. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட புதுமுக நாயகர்களாக இருந்தாலும் கூட கதைக்கருவும், திரைக்கதையும், கேரக்டர்கள் உருவாக்கமும் பிடித்துப்போனால் நிச்சயம் அந்த படங்கள் ரசிகர்களால் வரவேற்று கொண்டாடப்படும்.

அந்த வகையில், 2023ம் ஆண்டில் ரசிகர்களின் மனம் கவர்ந்த இரண்டு படங்கள் குறட்டை பிரச்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட நடிகர் மணிகண்டன் நடித்த குட்நைட், க்ரைம் த்ரில்லர் படமாக ரசிகர்களை விறுவிறுப்பாக சீட் நுனியில் அமர வைத்த போர்த்தொழில் ஆகிய படங்கள் மட்டுமே, இந்த 2023ம் ஆண்டில் சிறந்த படங்களாக சினிமா விமர்சகர்களால் இப்போது பலத்த பாராட்டை பெற்றுள்ளன.

- Advertisement -

சற்று முன்