- Advertisement -
Homeபொழுதுபோக்குஇலங்கை கலை நிகழ்ச்சியில் நடந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் அவர் ஒருவர் மட்டும்தான் காரணம் - உண்மையை...

இலங்கை கலை நிகழ்ச்சியில் நடந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் அவர் ஒருவர் மட்டும்தான் காரணம் – உண்மையை போட்டுடைத்த பிரபலம்

- Advertisement -

இலங்கை யாழ்பாணத்தில் முற்றவெளி என்ற மைதானத்தில் பாடகர் ஹரிஹரன் இசை நிகழ்ச்சி மற்றும் பிரபல நடிகர், நடிகைள் என திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சி கடந்த வாரத்தில் நடந்தது. இதில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகர், நடிகையர் உயிர் பிழைத்தால் போதும் என்ற ஒரு மோசமான கட்டத்தில் இருந்து தப்பித்து திரும்பி வந்திருக்கின்றனர்.

முதலில் இந்த நிகழ்ச்சிக்கு முற்றிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என்றுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இசை நிகழ்ச்சி மற்றும் நடிகர் நடிகையர் பங்கேற்கும் கலை இரவு என்பதால், யாழ்பாண மக்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் தெரிந்துள்ளது. எனவே, இதை கமர்ஷியல் ஆக செய்தால் பல கோடி பார்க்கலாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

- Advertisement -

திறந்தவெளி மைதானத்தில் நடந்த இந்த விழாவில் முன்பகுதியில் கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கியவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டது. கட்டணமின்றி பார்க்க வருபவர்களுக்கு பின்னால் தடுப்பு ஏற்படுத்தி, அங்கிருந்து பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கட்டணமின்றி பார்க்க வந்த ரசிகர் கூட்டம் மிக மிக அதிகமாக இருந்ததால், கூட்டத்தை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

கட்டுக்கடங்காத கூட்டம், தமன்னாவின் காவாலா பாட்டுக்கு நடனத்தை பார்த்தவுடன் ஆவேசம் கொண்டு கத்தியபடி, தடுப்பை உடைத்துக்கொண்டு முன்னேறியது. மேடையை நோக்கி பாய்ந்த ரசிகர் கூட்டத்தால் நடிகர், நடிகையர் திக்முக்காடி திணறினர். மேடையேறிய ரசிகர் கூட்டத்தில் அங்கிருந்த கேமராக்கள், ஸ்பீக்கர் உடைந்தன. விபரீதத்தை உணர்ந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அந்த பகுதியே கலவர பூமியாக மாறிப்போனது.

- Advertisement -

இந்த சம்பவம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறுகையில், இலங்கையில் நடந்த கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர், நடிகையர் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்துள்ளனர். இதற்கு முழுக்க முழுக்க காரணம், நடிகை ரம்பாவின் கணவர் இலங்கையை சேர்ந்த இந்திரகுமார்தான். அவர்தான் இந்த நிகழ்ச்சியை நடத்தியவர்.

முதலில் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என அறிவித்த அவர், பின்னர் பணத்துக்கு ஆசைப்பட்டு கமர்ஷியலாக மாற்ற, தமன்னாவுக்கு ரூ. 1 கோடி கொடுத்து வரவழைத்துள்ளார். பிறகு 5 ஆயிரம்,10 ஆயிரம், 20 ஆயிரம்,40 ஆயிரம் ரூபாய் டிக்கெட் விலைக்கு விற்றுள்ளனர். இதில் 40 ஆயிரம் ரூபாய் டிக்கெட் வாங்கினால் தமன்னாவுடன் செல்பி எடுக்கலாம் என்றும் ஒரு சலுகையை அறிவித்துள்ளார். அவரது பணத்தாசையால், இப்படி ஒரு மோசமான சம்பவம், இலங்கையில் நடந்துள்ளது. இதற்கு அவர் மட்டுமே காரணம் என, செய்யாறு பாலு கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்