- Advertisement -
நடிகர் பிரபாஸ் இயக்குனர் கருணாகரன் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாகவும் அந்த படம் காதல் கதையில் உருவாக உள்ளதாகவும் ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் பிரபாஸ் நடித்த ஹிட் படமான டார்லிங் படத்தின் தொடர்ச்சியாக ஒரு புதிய கதையை எழுதும் பணி தற்போது நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதில் எந்த தகவலும் உண்மை இல்லை என்றும் இது போன்ற எந்த ஒரு திட்டமும் இப்போது இல்லை என்றும் நடிகர் பிரபாஸ் தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது பிரபாஸ் பௌசி கல்கி 2 மற்றும் ஸ்பிரிட் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படங்களை தவிர மற்ற எந்த ஒரு புதிய படத்திலும் அவர் இதுவரை கமிட்டாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





