- Advertisement -
Homeபொழுதுபோக்குமணமேடையில் இருந்து மாப்பிள்ளை எழுந்துசெல்வது போல சென்று விட்டார், நடிகர் அஜீத்குமார் குறித்து வெளிப்படையாக விமர்சித்த...

மணமேடையில் இருந்து மாப்பிள்ளை எழுந்துசெல்வது போல சென்று விட்டார், நடிகர் அஜீத்குமார் குறித்து வெளிப்படையாக விமர்சித்த பிரபல இயக்குனர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை ஒரு இயக்குனர் கொடுத்தாலும் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் அஜீத்குமார் போன்ற உச்ச நட்சத்திர ஹீரோக்களை வைத்து படம் டைரக்ட் செய்தால் தான் அவர்களது இமேஜ் உச்சத்தை தொடும். அதுதான் பல இயக்குனர்களின் லட்சியமாக இருக்கிறது. சிலருக்கு உடனே வாய்க்கிறது. சிலருக்கு பல ஆண்டுகள் கடந்தும் வாய்ப்பதில்லை.

போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் தானா சேர்ந்த கூட்டம் காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இப்போது பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐகே என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். வரும் 10ம் தேதி இந்த படம் திரைக்கு வர உள்ளது.

- Advertisement -

இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் அஜீத்குமார் நடித்த வலிமை படத்துக்கு பிறகு அவரது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க கமிட் ஆகியிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவனை வேண்டாம் என அஜீத்குமார் மறுத்துவிட்டு இயக்குனர் மகிழ்திருமேனிக்கு விடாமுயற்சி படத்தை இயக்கும் வாய்ப்பளித்தார். இதனால் நடிகை நயன்தாராவுக்கும் அஜீத்குமாருக்கும் இடையில் கூட மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் எல்ஐகே பட விழாவில் பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியதாவது, ஒரு பெரிய நடிகரின் படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் அது கடைசி நேரத்தை கைகூடவில்லை. திருமண மேடையில் இருந்து மணமகன் விலகி எழுந்துச் செல்வது போன்ற ஒரு நிலை எனக்கு ஏற்பட்டது.

- Advertisement -

அப்படி மணமேடையில் திருமணம் நின்று போன மணமகளை யாருமே திருமணம் செய்ய முன்வர மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலை எனக்கும் ஏற்பட்டது. அதன் பிறகு சின்ன பட்ஜெட் படங்கள் மட்டுமே எனக்கு கிடைத்தன. நான் திறமையற்றவன் என்று மற்றவர்கள் கருதுகிறார்களோ என எனக்கு அவமானமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் என்னை யாரும் முழுமையாக நம்பவில்லை.

அதன் பிறகு தான் எல்ஐகே படத்தை தொடங்கினேன். இந்த பயணத்தில் பலர் எனக்கு துணையாக நின்றனர். ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு பாதியிலேயே நின்று போனது. அதன் பின்னர் பணிகள் மீண்டும் மும்முரமாக நடந்தன. எனது மனைவி நயன்தாரா தான் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்காக பெற்ற முன் பணத்தை கொடுத்து எனக்கு உறுதுணையாக நின்றார் என்பதை பின்பு நான் தெரிந்து கொண்டேன் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்