- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங்கில் நடிக்க ஆர்வமாக வந்த விஜயகாந்தை திருப்பி அனுப்பிய டைரக்டர் - அந்த படம்...

ஷூட்டிங்கில் நடிக்க ஆர்வமாக வந்த விஜயகாந்தை திருப்பி அனுப்பிய டைரக்டர் – அந்த படம் எடுத்தப்போ நடந்த சம்பவமா இது?

- Advertisement -

நடிகர் விஜயகாந்த், தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தமாக வாழ்ந்தவர். அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் நடித்த படங்களும், அவருடன் வாழ்ந்த மனிதர்களும், அவரால் உதவப்பட்ட மனிதர்களும் அவரது புகழை பேசிக்கொண்டே தான் இருப்பார்கள். இதை தான் எம்ஜிஆர் இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்று பாடி வைத்தார்.

அந்த பாடல் வாிகளை இந்த மண்ணில் வாழ்ந்த குறிப்பிட்ட சிலர்தான் நிறைவேற்றி இருக்கின்றனர். பேர் சொல்லும்படியான சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு சென்றிருக்கின்றனர். தமிழக மக்களை பொருத்ததவரை, விஜயகாந்த் அந்த பாடல் வரிகளுக்கு மிக தகுதியான மனிதர்தான்.

- Advertisement -

ஏனெனில் அவருடன் நடித்த பல நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், சினிமா தவிர்த்து நண்பர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் விஜயகாந்தின் நல்ல குணங்களை, சிறந்த செயல்களை பாராட்டி இருக்கின்றனர். குறிப்பாக, தன்னை மிக இழிவாக பேசிய வடிவேலுவை எந்த இடத்தில் அவமரியாதையாக கேப்டன் பேசியது இல்லை என்ற ஒரு விஷயமே அவரது பெருந்தன்மையை, சிறந்த குணத்தை விளக்கி விடும்.

நடிகர் விஜயகாந்த் நடித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த படங்களில் ஒன்று சின்னக்கவுண்டர். இன்றும் அந்த படத்தை ரசித்து பார்க்கலாம். அந்த படத்தை இயக்கிய டைரக்டர் ஆர்வி உதயகுமார் கூறுகையில், சின்னக்கவுண்டர் படத்தை நான் எடுத்த போது, பரதன் என்ற படத்தில் கேப்டன் நடித்துக் கொண்டு இருந்தார். அப்போது பகலில் சின்னக்கவுண்டர் படப்பிடிப்பிலும், இரவில் பரதன் படப்பிடிப்பிலும் அவர் கலந்துக்கொள்வார்.

- Advertisement -

பரதன் படத்துக்காக, இரவு முழுவதும் கண் விழித்து நடித்துவிட்டு, மறுநாள் காலை காரில் பொள்ளாச்சிக்கு வந்து, எங்களை கூப்பிட்டு வாங்க ஷூட்டிங் போகலாம் என்று கேப்டன் அழைப்பார். அப்போது விஜயகாந்தின் கண்கள் இரண்டும் சிவந்து போய் காணப்படும். ஆனால் சின்னக்கவுண்டர் கண்கள் வெள்ளையாக இருக்க வேண்டும்.

அதனால், அவரிடம் நீங்க இப்ப போய் தூங்குங்க. அப்புறமாக ஷூட்டிங் வாங்க என்பேன். சில மணி நேரம் தூங்கிவிட்டு அவர் திரும்பி வருவார். அப்போது கண்கள் வெள்ளையாக, இயல்பாக இருக்கும். அப்புறம் ஷூட்டிங் எடுப்போம். அவரை போன்ற ஒரு கடுமையாக உழைக்கும் ஒரு நடிகரை நான் பார்த்தது இல்லை என்று கூறியிருக்கிறார் இப்போதைய நடிகர் சங்கத் தலைவரான ஆர்வி உதயகுமார்.

- Advertisement -

சற்று முன்