- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தி வேண்டாம் என்பவர்கள், இதை மட்டும் செய்யலாமா? தமிழ் சினிமாத்துறை குறித்து விமர்சித்து பேசிய நடிகர்...

இந்தி வேண்டாம் என்பவர்கள், இதை மட்டும் செய்யலாமா? தமிழ் சினிமாத்துறை குறித்து விமர்சித்து பேசிய நடிகர் பவன் கல்யாண்!

- Advertisement -

இந்தியை தமிழ்நாட்டில் முக்கிய மொழியாக மாற்றிவிட வேண்டும் என்பதில் மத்தியில் ஆளும் மோடி அரசு தீர்மானமாக இருந்து வருகிறது. ஏற்கனவே வடமாநில மக்கள் ஏராளமானோர் தமிழ்நாட்டில் தொழிலாளர்களாக குடியேறி, நிரந்தரவாசிகளாக மாறிவிட்ட நிலையில் இந்திதான் அதிகமாக செவிகளில் ஒலிக்கிறது.

பெரும்பாலான காய்கறி கடைகள் மளிகை கடைகள் மற்றும் வியாபாரிகள் பலரும் தொழில் ரீதியாக இந்தி கற்றுக்கொள்ளும் நிலைக்கு மாறிவிட்டனர். இந்தி தெரிந்தால்தான் வியாபாரம் செய்ய முடியும் என்ற சூழல் மாறி வருகிறது. இன்னும் 10 ஆண்டுகள் இதே நிலை நீடித்தால் தமிழ்நாட்டில் தமிழர்களை விட வடக்கன்ஸ் எனப்படும் வடமாநிலத்தவர் கூட்டம் பலமடங்கு பெருகிவிடும்.

இந்த சூழலில் மும்மொழி கொள்கையை ஏற்க மறுக்கும் தமிழக அரசுக்கு தர வேண்டிய 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கல்வி நிதியை இன்னும் மத்திய அரசு விடுவிக்காமல் இருக்கிறது. மும்மொழி கொள்கையை இந்தியை ஆதரிக்காத தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியை தர முடியாது என பகிரங்கமாகவே மத்திய அரசு கூறி வருகிறது.

தமிழ்நாட்டில் இந்தியை அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பாஜக தவிர்த்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது. இந்த சூழலில் நடிகர் மற்றும் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், மத்திய அரசுக்கு ஆதரவாக இந்தி விவகாரத்தில் பேசி இருக்கிறார். இவர் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி, நடிகர் ராம்சரணின் சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவில் நடந்த விழா ஒன்றில் நடிகர் மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் பேசுகையில் தமிழ்நாட்டில் எங்களுக்கு இந்தி வேண்டாம் என்று சொல்கின்றனர். அப்படி என்றால் உங்களது தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்வதை முதலில் நிறுத்துங்கள்.

வடமாநிலங்களில் இருந்து சினிமா டெக்னீஷியன்களை சென்னைக்கு கொண்டு வராதீர்கள். இந்தி மொழி மட்டும் வேண்டாம். ஆனால் இந்தி பேசும் மக்கள் பணம் மட்டும் உங்களுக்கு வேண்டுமா, என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்தி மொழி விவகாரத்தில் தமிழ்நாடு மக்கள் மற்றும் தமிழ் சினிமா துறையினரை விமர்சித்து பவன் கல்யாண் பேசியிருப்பது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்