இயக்குனர் பி வாசு இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் பல படங்களில் நடித்தார். அதில் ஒரு படம்தான் வேலை கிடைச்சிடுச்சு. கடந்த 1990ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் சத்யராஜ் கௌதமி விஜயகுமார் சுமித்ரா கவுண்டமணி ஆனந்தராஜ் சரத்குமார் மோகன் வி நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
வேலையில்லாத படத்தின் நாயகன் சத்யராஜ், ஊரையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வில்லனை எதிர்த்து மக்களை காப்பாற்றுவதுதான் படத்தின் கதை. இந்த படம் தமிழில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. வெற்றியும் பெறாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.
புரட்சித் தமிழன் சத்யராஜ் என்கிற அடைமொழியோடு நடிகர் சத்யராஜ் அப்போது நிறைய ஆக்சன் படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அந்த வரிசையில் வெளியான ஒரு படமாக தான் வேலை கிடைச்சிடுச்சு படமும் இருந்தது. இந்த படத்தில் ஸ்கூலில் பாத்ரூம் கழுவுகிற பெண்ணை டீச்சர் என நம்பி காதலித்து ஏமாறும் காமெடி ரோலில் கவுண்டமணி நடித்திருப்பார்.
தமிழில் சொதப்பிய இந்த படத்தை தெலுங்கில் ரீ மேக் செய்து அசௌம்ப்ளி ரவுடி என்ற பெயரில் உருவானது. இதில் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் மோகன் பாபுவும் நாயகியாக திவ்யா பாரதியும் நடித்திருந்தனர். இந்த படம் தெலுங்கில் பெரிய வெற்றியை கொடுத்தது. குறிப்பாக படத்தின் ஹீரோ மோகன்பாபுவுக்கு ஒரு முக்கிய படமாகவும் அமைந்தது.
அதுவரை தெலுங்கு படங்கள் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை இந்த படம் முறியடித்து பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தது. மோகன்பாபுவின் அதிரடியான நடிப்பு படத்தில் இடம்பெற்ற பருச்சூரி கோபாலகிருஷ்ணாவின் வசனங்கள் இந்த படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றது. சாதாரண நடிகராக இருந்த மோகன்பாபுவுக்கு இந்த படம் சூப்பர் ஸ்டார் இமேஜ் கொடுத்தது.
மொத்தம் 41 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி எடுத்து முடிக்கப்பட்ட அசௌம்ப்ளி ரவுடி படம் ஆந்திராவில் 125 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரிய வெற்றியை பெற்றது. தெலுங்கில் மாஸ் ஹிட் ஆன இந்த படத்தை இந்தியிலும் ரீ மேக் செய்தனர். இந்த படத்தில் ஹீரோவாக அனில் கபூர் ஹீரோயினாக ஜூஹி சாவ்லா ஆகியோர் நடித்திருந்தனர். லோபர் என்ற டைட்டிலில் இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது.





