- Advertisement -
Homeபொழுதுபோக்குகதையை கேட்டவுடன் ஓகே சொன்ன இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், அந்த படத்தில் நடிக்க யோசித்த விஜய்...

கதையை கேட்டவுடன் ஓகே சொன்ன இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், அந்த படத்தில் நடிக்க யோசித்த விஜய் – நடந்த சம்பவத்தை சொன்ன பிரபல இயக்குனர்!

- Advertisement -

நடிகர் விஜய் ஆரம்பத்தில் பெரும்பாலும் காதல் படங்களில்தான் நடித்தார். துள்ளாத மனமும் துள்ளும் குஷி காதலுக்கு மரியாதை பூவே உனக்காக பிரியமுடன் ஷாஜகான் என பல படங்களில் காதல் நாயகனாக தான் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். ஆனால் ஆக்சன் நாயகனாக அவர் மாறியது பகவதி மற்றும் அதைத் தொடர்ந்து வெளியான திருப்பாச்சி சிவகாசி திருமலை போன்ற படங்களில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பகவதி படத்தின் இயக்குனர் ஏ வெங்கடேஷ் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, பகவதி படத்தோட கதையை நான் ரெடி பண்ணி வெச்சுட்டேன். இவரை வெச்சு பண்ணலாமா, அவரை வெச்சு பண்ணலாமா என்று எனக்கு யோசனையாக மைண்டுல ஓடிக்கொண்டே இருக்கிறது. அப்போ தியேட்டருக்கு நான் ஒரு படம் பார்க்க போறேன். அங்க விஜய் நடித்த ஷாஜகான் படம் டிரயெ்லர் ஓடீட்டு இருக்குது.

- Advertisement -

அந்த டிரெய்லர் ஓடும்போது தியேட்டர்ல கிளாப்ஸை பார்க்கறேன். அப்பவே என் மைண்டுல பிளாஷ் ஆச்சு. இவரை மாஸ் பேஃன்ஸ் பாலோ பண்ண வந்துட்டாங்க. அதுவரைக்கும் விஜயை வளர்ந்து வர்ற ஒரு ஹீரோவாக நான் மைண்டுல நினைச்சுட்டு இருந்தேன். ஆனா ஷாஜகான் டிரயெ்லரை பார்த்தப்போ இவருக்கு பயங்கரமா பேன்ஸ் இருக்காங்க அப்படீன்னு தெரிஞ்சுகிட்டேன்.

அப்போ இனி தலைவனை ஆக்சன் ஹீரோவா மாத்திட வேண்டியதுதான் என்று முடிவு செய்து நான் தயாராக வைத்திருந்த கதையை எடுத்துக்கொண்டு போய் விஜய் சாரின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் சார்கிட்ட கதை சொன்னேன். அவர் முழு கதையையும் கேட்ட ஒடனே தம்பி, சூப்பரா இருக்குதுன்னு சொல்லிட்டார். இந்த மாதிரி தான் விஜயை கொண்டு போகணும்ன்னு நான் நெனைச்சிட்டு இருந்தேன்.

- Advertisement -

விஜய்க்கு லவ் படங்கள் இனி போதும். ஆக்சன் படங்களில் நடிக்க வைத்து அந்த பிளாட்பாரத்துக்கு அவரை கொண்டு போயிடலாம் என்று நான் நெனைச்சிட்டு இருந்தேன். கரெக்டான நேரத்துல அதுக்கு தகுந்த மாதிரி கதை சொல்லியிருக்கீங்க என்று என்னை பாராட்டினார். ஆனால் விஜய்க்கு இப்படி ஒரு ஆக்சன் கதையில் நடிக்க நிறைய தயக்கம் இருந்தது.

நான் இப்படி ஆக்சன் ஹீரோவாக மாஸ் காட்டி நடித்தால் ரசிகர்கள் ஏத்துக்கொள்வார்களா என்று ரொம்பவும் யோசித்தார். ஏனெனில் இது ரஜினி போன்ற ஹீரோக்கள் நடிக்க வேண்டிய கதை என்பதால், ரஜினி பெயரை சொல்லாமல் விஜய், நான் இப்படி நடிச்சா ஏத்துக்குவாங்களா என்றே என்னை கேட்டுக்கொண்டிருந்தார். ஆக்சன் ஹீரோக்கள் ஒரே படத்தில் ஆவதில்லை. படிப்படியாக தான் ஆகிறார்கள் என்று சொல்லி அவரை பகவதி படத்தில் தைரியமாக நடிக்க வைத்தேன் என்று இயக்குனர் ஏ வெங்கடேஷ் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்