- Advertisement -
Homeபொழுதுபோக்குஇரண்டரை மாதங்கள் கடந்தும் இன்னும் ஓடிடி யில் ரிலீஸ் ஆகாத மெகா ஹிட் மலையாள திரைப்படம்...

இரண்டரை மாதங்கள் கடந்தும் இன்னும் ஓடிடி யில் ரிலீஸ் ஆகாத மெகா ஹிட் மலையாள திரைப்படம் ஆடுஜீவிதம், ஏமாற்றத்தில் ரசிகர்கள் – அதுதான் காரணமா?

- Advertisement -

நடப்பாண்டின் துவக்கத்தில் இருந்து மலையாளத்தில் வௌியான சில படங்கள் தமிழ்நாட்டில் பெரிய அளவில் வரவேற்பையும், வெற்றியும் பெற்றன. அந்த வகையில் மஞ்சும்மெல் பாய்ஸ், பிரம்மயுகம், பிரேமலு, ஆடுஜீவிதம், ஆவேசம் உள்ளிட்ட படங்களை குறிப்பிட்டுச் சொல்லாம். இதில் பிருத்விராஜ் நடித்த ஆடுஜீவிதம் படம் ரூ. 150 கோடிக்கு வசூலித்தது.

இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்டோர் நடித்த இந்த படம், பெரிய அளவில் வெற்றிப் படமாக அமைந்தது. எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் என்ற உண்மை சம்பவத்தை வைத்து எழுதிய நாவலை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. வறுமையை வாடும் நஜீப் என்ற இளைஞன், தன் குடும்ப சிரமத்தை போக்க, அரபு நாட்டுக்கு வேலை தேடிச் சென்று அங்கு பாலைவனத்தில் ஆடுமேய்க்கும் தொழிலில் சிக்கிக்கொள்வதுதான் படத்தின் கதை.

இந்த படத்தில் நஜீப் என்ற கேரக்டரில் மிகச் சிறப்பான நடிப்பை தந்துள்ள பிருத்வி ராஜூக்கு நிச்சயம் பல விருதுகள் கிடைக்கும். இந்த படம் நிறைய விருதுகளுக்கு தகுதியான ஒரு படம் என படம் பார்த்த பலரும் விமர்சித்த நிலையில், கடந்த மே 26ம் தேதி, இந்த படம் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று துவக்கத்தில் கூறப்பட்டது.

ஆனால் இப்போது ஜூன் 15ம் தேதி ஆன பிறகும் இந்த படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் இதுவரை ரிலீஸ் செய்யப்படவில்லை. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்த படத்தை ஆஸ்கார் விருதுக்கும், சர்வதேச திரைப்பட விழாவுக்கும் அனுப்பும் பணியில், தயாரிப்பாளர் தரப்பில் ஏற்பாடுகளை செய்து வருவதால், ஓடிடி படம் ரிலீஸ் செய்வது தற்காலிகமாக தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல் படத்தின் சாட்டிலைட் உரிமம் குறித்தும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. படத்துக்கு ஏகப்பட்ட விருதுகள் கிடைக்கும் சூழல் இருப்பதால், அதற்கேற்ப ஓடிடி, சாட்டிலைட் உரிமத்தின் விலையை நிர்ணயிக்கலாம் என்ற அடிப்படையில், படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் தாதம் செய்வதாக தகவல் தெரிவிக்கின்றன. எனினும் ஆடுஜீவிதம் படம் மார்ச் 28ல் வெளியான நிலையில், இரண்டரை மாதங்களாகியும் இன்னும் ஓடிடியில் ரிலீஸ் ஆகாதது ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

சற்று முன்