- Advertisement -
Homeபொழுதுபோக்குலோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்திற்கு இதுதான் டைட்டிலா... ஃபர்ஸ்ட் லுக்கே மாஸா இருக்கேப்பா...

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்திற்கு இதுதான் டைட்டிலா… ஃபர்ஸ்ட் லுக்கே மாஸா இருக்கேப்பா…

- Advertisement -

ஆரம்பத்தில் வங்கி ஊழியராக இருந்து பின்பு அந்த வேலையை உதறிவிட்டு சினிமாவுக்குள் வந்தவர் லோகேஷ் கனகராஜ். இதுவரைக்கும் ஐந்தே ஐந்து திரைப்படங்கள் எடுத்திருக்கும் அவர், முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் சேர்ந்து பலருக்கும் விருப்பமான இயக்குனராக உருவெடுத்துள்ளார். இயக்கத்தில் முழு கவனம் செலுத்தி தற்போது தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்ட அவர், தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ஜி ஸ்குவாட் என பெயர் வைத்திருப்பதாக தெரிவித்தார். இதிலிருந்து தொடர்ந்து படைப்புகள் வெளியாகும் என்றும் அவர் கூறியிருந்தார். இதில் முதலாவதாக விஜயகுமார் நடிக்கும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். அடுத்ததாக தனது நண்பர் ரத்தினவேல் இயக்கும் ஹாரர் படத்தையும் அவரை தயாரிக்க உள்ளார்.

- Advertisement -

இதில் விஜயகுமார் உடன் லோகேஷ் இணைந்திருக்கும் படம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. உறியடி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் விஜயகுமார். 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகும் போது அந்த அளவு வரவேற்பு பெறவில்லை. இதற்குக் காரணம் படம் பற்றி யாருக்கும் தெரியாமல் இருந்தது தான்.

பின்னர் சமூக வலைதளங்களில் படம் குறித்த காட்சிகள் வெளியாகி விமர்சனம் நல்ல கிடைக்க, அனைவரும் உறியடி திரைப்படத்தை கொண்டாடினர். வெளியூரிலிருந்து தங்கி பொறியியல் கல்லூரி படிக்கும் மாணவர்கள், அங்கு நடக்கும் சாதிய பிரச்சனை, அது எப்படி மாணவர்கள் வாழ்க்கைக்குள் வருகிறது, அதை அவர்கள் எப்படி கையாண்டார்கள் என்பதை மோதல் கலந்து கூறி இருப்பார் விஜயகுமார். இளைஞர்கள் மத்தியில் அந்த படம் பெரும் வரவேற்பு பெற, அடுத்ததாக உறியடி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தார்.

- Advertisement -

ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்களை கவரத் தவறியது. ஒரு தொழிற்சாலை பிரச்சனையை மையமாக வைத்து அவர் கதை எழுத, அதில் ஏதோ ஒன்று குறைவதாக பலரும் விமர்சித்தனர். இதனிடையே சூரரை போற்று திரைப்படத்திற்கு விஜயகுமார் வசனம் எழுதியிருந்தார். ஆனால் கடைசிவரை அவரது பெயர் வெளியே வராத நிலையில், படக்குழுவினர் மேலே அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இப்படியான சூழலில்தான் அவர் மீண்டும் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அப்பாஸ் இயக்கியுள்ளார். இதற்கு பைட் கிளப் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் போஸ்டரில் சிக்ஸ் பேக் உடன் விஜயகுமார் இருப்பது பலரையும் கவர்ந்துள்ளது. டிசம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் நன்றாக இருப்பதால், ஒரு பக்கா ஆக்சன் படத்தை எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்