- Advertisement -
Homeபொழுதுபோக்குஅண்ணனுக்காக விட்டுக்கொடுத்த தம்பி, இந்த முறையாவது நடிகர் சூர்யா பட்டாசு கௌப்புவாரா? - ஆவலாக காத்திருக்கும்...

அண்ணனுக்காக விட்டுக்கொடுத்த தம்பி, இந்த முறையாவது நடிகர் சூர்யா பட்டாசு கௌப்புவாரா? – ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் 6 நாட்களில் ரூ. 104 கோடி வசூலை அள்ளியிருந்தது. வசூல் ரீதியாக திருப்தியளித்த இந்த படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை.

தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கு அவரது படங்கள் விமர்சன ரீதியான தோல்வியை தந்துவரும் நிலையில் ரெட்ரோ படத்தை தான் பெரிய அளவில் எதிர்பார்த்தார். ஆனால் அந்த படமும் அவருக்கு போதிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தரவில்லை. எனினும் இந்த படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் ரூ. 10 கோடியை அவர் அகரம் பவுண்டேசனுக்கு கல்வி நிதியாக வழங்கியது பெரிய பாராட்டை பெற்றுள்ளது.

ஏனெனில் தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகருமே கல்வி வளர்ச்சிக்காக, கல்வி பெறும் ஏழை மாணவர்களுக்கு உதவுவதற்காக என இதுவரை ரூ. 10 கோடியை எடுத்து நிதியாக வழங்கியது இல்லை. அதுவும் ரெட்ரோ படத்தின் ஒரு தயாரிப்பாளராக நடிகர் சூர்யா, இந்த படத்தின் மூலம் வந்த கணிசமான லாபத்தில் ரூ. 10 கோடியை அகரம் பவுண்டேசனுக்கு வழங்கிய பெரிய விஷயமாக பார்கப்படுகிறது.

நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் சூர்யா 45. நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் நடிகர் சூர்யா வக்கீலாக நடித்திருக்கிறார். திரிஷா நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் அய்யனார் கருப்பண்ணசாமி கதையை மையப்படுத்தி ஆர்ஜே பாலாஜி டைரக்ட் செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த படத்துக்கு பேட்டை கருப்பு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இன்னும் படக்குழு அதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. சூர்யா பிறந்த நாளன்று வரும் ஜூலை 23ம் தேதி டைட்டில் டீசர் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த படம் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. ஏனெனில் மூக்குத்தி அம்மன் என்ற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்தவர் ஆர்ஜே பாலாஜி.

இந்த சூழலில் நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்து வரும் சர்தார் 2 படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் என திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தீபாவளிக்கு வேட்டை கருப்பு படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால், அண்ணன் படத்துக்கு போட்டியாக தனது படம் வேண்டாம் என நடிகர் கார்த்தி முடிவு செய்துவிட்டார். அண்ணனுக்கு இந்த படம் மாபெரும் வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதால், தனது படம் சர்தார் 2 குறுக்கிட கூடாது என சர்தார் 2 படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளி வைத்துவிட்டார். ஏனெனில் அதுவும் பிரமாண்ட பட்ஜெட் படம் என்பதால் பொங்கலுக்கு வருவதே சரி என படக்குழுவும் முடிவு செய்திருக்கின்றனர்.

சற்று முன்