- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படத்தில் பாலிவுட் ஸ்டார் நடிகர் அமீர்கான் நடிப்பது உறுதி; விரைவில் அறிவிப்பு வெளியாகும் -...

கூலி படத்தில் பாலிவுட் ஸ்டார் நடிகர் அமீர்கான் நடிப்பது உறுதி; விரைவில் அறிவிப்பு வெளியாகும் – அவரோட கேரக்டர் குறித்து கசிந்த தகவல்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் கடந்த 10ம் தேதி வெளியானது. ஜெயிலர் படம் போல் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்த்த நிலையில், வேட்டையன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. அதற்கு காரணம் இந்த படத்துக்கு போதிய அளவில் பிரமோஷன் தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேட்டையன் படத்தில் என்கவுண்டர் மற்றும் எஜூகேஷன் மாபியா குறித்த முக்கிய அம்சங்களை கொண்டிருந்தாலும் அந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் இன்னும் ஆழமாக கொண்டு செல்லாததே படத்திற்கான வரவேற்பும், வசூலும் குறையக் காரணம் என்று கூறப்படுகிறது. எனினும் முதல் நாளில் 60 கோடி ரூபாய், 2ம் நாளில் 37 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

வேட்டையன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் இப்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். கூலி படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்து விட்டதாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் கூறியிருந்தார். மீண்டும் வருகிற அக்டோபர் 17ஆம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது. எனினும் ரஜினிகாந்த் பங்கேற்கும் காட்சிகள் இன்னும் சில வாரங்கள் கழித்துதான் எடுக்கப்படுகிறது.

கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் சவுபின் சாஹிர் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தின் சில முக்கிய நடிகர்கள் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

கூலி படத்தின் 2ம்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில் இந்தி நடிகர் அமீர்கான் நடிக்க உள்ளதாக ஆரம்பத்தில் இருந்தே தகவல் பரவி வந்த நிலையில், இப்போது கூலி படத்தில் அமீர்கான் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழில் நேரடியாக அமீர்கான் நடிப்பது இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கூலி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு, வருகிற 17ம் தேதி சென்னையில் துவங்குகிறது. இதில் அமீர்கான் பங்கேற்பது உறுதியாகி உள்ளது. இதில் ரஜினியும், அவரும் சம்பந்தப்பட்ட சண்டை காட்சிகள் எடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இந்த படத்தில் அமீர்கான் பிரதான வில்லன் கேரக்டரில் தான் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் கூலி படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி, தமிழ் புத்தாண்டில் வெளியிட திட்டமிட்டப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்