- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் படத்தில் என்னை ஏமாற்றி விட்டனர், பிரபல நடிகை நடிகர் சங்கத்தில் புகார் - இப்படி...

இந்தியன் படத்தில் என்னை ஏமாற்றி விட்டனர், பிரபல நடிகை நடிகர் சங்கத்தில் புகார் – இப்படி ஒரு சம்பவம் நடந்தது வெளியில் தெரியவே இல்லையே?

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2 படம் வருகிற 12ம் தேதி, ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத்தி சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தியன் 2 படமும், லஞ்சம் ஊழல் பற்றி பேசும் படமாக தான் உருவாக்கப்பட்டுள்ளது. அதே போல் இந்த படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 3 படமும், இப்போதே எடுத்து முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. வருகிற 2025ம் ஆண்டில் ஜனவரி 14ம் தேதி, பொங்கல் பண்டிகையன்று அந்த படத்தை வெளியிட, டைரக்டர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.

இந்தியன் 2, இந்தியன் 2 படங்கள் உருவாக, ஆணிவேராக இருந்தது 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்தியன் படம்தான். அதன் தொடர்ச்சிதான், இந்த 2 படங்களும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் படத்தில் சேனாபதி, இந்தியன் தாத்தாவாக நடித்த கமலுக்கு, சிறந்த நடிகர் தேசிய விருதை, மத்திய அரசு வழங்கி கௌரவித்தது.

இந்தியன் படத்துக்கு ஏஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார், அனைத்து பாடல்களும் செம ஹிட் பாடல்களாக அமைந்தன. கப்பலேறிப் போயாச்சு, மாயா மச்சீந்திரா, டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா, பச்சைக்கிளிகள் தோளோடு, அக்கடான்னு நாங்க உடை போட்டா என 5 பாடல்களுமே வேற லெவலில் இருந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தின.

இந்த படத்தில், சுதந்திர போராட்ட கால சம்பவங்கள் பிளாஷ்பேக் காட்சிகளாக வரும். அதில் தாத்தா கமல், இளைஞராகவும், பாட்டி சுகன்யா, இளம்பெண்ணாக அமிர்தவல்லியாகவும் நடித்திருப்பார். ஒரு காட்சியில் அன்னிய துணிகளை புறக்கணிப்போம் என்று போராட்டத்தில் ஈடுபடும் சுகன்யா உள்ளிட்ட பெண்களை, ஆங்கிலேயர்கள் அவர்களது ஆடைகளின்றி விரட்டுவர். அப்போது பல பெண்கள் அருவியில் குதித்து உயிரிழப்பர். அந்த காட்சியில் சுகன்யா ஆடையின்றி மரத்துக்கு பின்னால் மறைந்து இருப்பார், அப்போது, கமல் அவரிடம் பேசி, உங்களை திருமணம் செய்துக்கொள்கிறேன் என உறுதியளிப்பார்.

இந்த காட்சியை எடுக்கும்போது கை மற்றும் முகம் மட்டுமே காட்டப்படும் என துவக்கத்திலேயே சுகன்யாவிடம் படக்குழு தரப்பில் கூறப்பட்ட நிலையில், அந்த காட்சி படமாக்கப்பட்ட போது வேறுவிதமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை சுகன்யா, இதுகுறித்து நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது சங்கத் தலைவராக இருந்த ராதாரவி, இதுகுறித்து விசாரித்து, படத்தில் அதுபோன்ற காட்சிகள் நிச்சயம் வராது, என உறுதி அளித்துள்ளார். இந்த தகவல் இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

சற்று முன்