கடந்த 20 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஹீரோக்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கூட இயக்குனர்களுக்கு கிடைத்தது இல்லை. ஆனால் இப்போது நிலமை அப்படியில்லை. ஹீரோக்களை விட அதிக சம்பளம் வாங்கும் அளவுக்கு இயக்குனர்களின் அந்தஸ்து உயர்ந்து விட்டது. இசையமைப்பாளர் ஒளிப்பதிவாளர் ஸ்டண்ட் மாஸ்டர் சம்பளங்களும் எகிறி விட்டது.
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணி செய்தவர் அட்லி. பிறகு ஆர்யா நயன்தாரா நடித்த ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அட்லி அறிமுகமானார். முதல் படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு அதிக கவனம் பெற்றார்.
அடுத்து நடிகர் விஜய் நடித்த தெறி மெர்சல் பிகில் என்ற 3 பிளாக்பஸ்டர் வெற்றி படங்களை இயக்கி அட்லி தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குனராக மாறினார். ஏனெனில் இந்த 3 படங்களுமே பெரிய அளவில் தளபதி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களாக இருந்தன. தொடர்ந்து அவருக்கான வரவேற்பும் ரசிகர்களிடம் அதிகரித்தது.
இதையடுத்து அட்லி பாலிவுட்டுக்குச் சென்றார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் என்ற படத்தை அட்லீ டைரக்ட் செய்தார். இதில் நயன்தாரா விஜய் சேதுபதி பிரியாமணி யோகிபாபு என நம்மூர் நடிகர்களும் நடித்தனர். இந்த படமும் 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளி இந்தி சினிமாவில் பெரிய வரவேற்பை பெற்றது.
இப்போது ஐகான் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் 22வது படத்தை அட்லி டைரக்ட் செய்கிறார். இதில் நாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இந்த படத்தின் பட்ஜெட் 600 கோடி ரூபாய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஒரு படத்தை டைரக்ட் செய்ய இயக்குனர் அட்லி 100 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு திரைப்பட இயக்குனராக 7,5 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை அட்லி வாங்கியிருக்கிறார். ROLLS ROYCE SPECTRE EV என்ற அந்த காரை அட்லீ வாங்கி வரலாற்றுச் சாதனை செய்துள்ளார். உயர்தர மின்சார வாகனம் அம்சம் கொண்ட இந்த காரை இந்தியாவில் முதல் ஆளாக இயக்குனர் அட்லி இறக்குமதி செய்திருக்கிறார் என்கின்றனர்.





