- Advertisement -
Homeபொழுதுபோக்குதந்தை என்பது ஒரு பொறுப்பு - தன் காதலியுடன் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி...

தந்தை என்பது ஒரு பொறுப்பு – தன் காதலியுடன் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன் குறித்து சூடாக அறிக்கை வெளியிட்ட அவரது மனைவி ஆர்த்தி!

- Advertisement -

சென்னையில் நடந்த திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்ல திருமண விழாவில் நடிகர் ரவி மோகன், தனது காதலி கெனிஷாவுடன் நேற்று பங்கேற்றார். இதுகுறித்து நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஓராண்டாக நான் மௌனத்தை மட்டுமே சுமந்து வந்தேன். இது என் பலவீனம் அல்ல. என் மீதான குற்றச்சாட்டு, மோசமான கிசுகிசுக்களை எதிர்கொண்டேன். இதற்கு என்னிடம் பதில் இல்லாமல் இல்லை.

என் குழந்தைகள் தேவை இன்றி சர்ச்சைகளை சுமக்க வேண்டாம் என அமைதியாக இருந்து விட்டேன். ஆனால் இன்று வெளியான போட்டோக்கள் வீடியோக்கள் வாயிலாக உலகத்திற்கே தெரிந்து விட்டது. எனது விவாகரத்து வழக்கு தொடர்கிறது. அன்பு விசுவாசம் நம்பிக்கையுடன் 18 ஆண்டுகளாக நான் அவருக்கு துணையாக இருந்தேன். ஆனால் அவர் விலகிச் சென்றுள்ளார்.

- Advertisement -

ஒவ்வொரு நாளும் இரவில் கண்ணீரை சுமந்து சென்றேன். ஒரு காலத்தில் அவரை எனது பெருமை என்று நினைத்தேன். ஆனால் இன்று அவரை அறிவுறுத்தலின் பேரில் வீட்டை விட்டு வெளியேறும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளேன். நான் பணத்திற்காக இருந்தேன் என குற்றம் சாட்டப்பட்டேன். ஒருவேளை அது உண்மையாக இருந்திருந்தால் நீண்ட காலத்திற்கு முன்பே என் தனிப்பட்ட நலன்களை பாதுகாத்திருப்பேன். ஆனால் நான் அன்பை மட்டுமே எதிர்பார்த்தேன்.

அதனால் தான் இது என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. என் பிள்ளைகளுக்கு 10 மற்றும் 14 வயதாகிறது. அவர்களுக்கு தேவை பாதுகாப்பு. அதிர்ச்சி அல்ல. சட்டப்பிரிவு பிரச்னைகள் எல்லாம் அவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வயது அல்ல. நான் சந்திக்க முயற்சித்த போது தவிர்த்தது அழைப்புகளுக்கு பதில் அளிக்காமல் இருந்தது இவை எல்லாம் எனக்கு காயங்களே.

- Advertisement -

இன்று நான் ஒரு மனைவியாகவோ அநீதி இழைக்கப்பட்ட பெண்ணாகவோ பேசவில்லை. என் குழந்தைகளுடன் நலனுக்காக மட்டுமே பேசுகிறேன். நான் இப்போது பேசவில்லை என்றால் அவர்களுக்கு தோல்வி ஆகிவிடும். நீங்கள் தங்கப்பட்டில் போகலாம். உங்கள் பொது வாழ்க்கையில் உங்கள் ரோல்களை மாற்றலாம். ஆனால் உண்மையை மீண்டும் எழுத முடியாது. தந்தை என்பது வெறும் பெயர் அல்ல. அது ஒரு பொறுப்பு.

சட்டப் பிரச்சினை முடியும் வரை இன்ஸ்டாவில் ஆர்த்திரவி என்றே இருப்பேன். தயவு செய்து என்னை முன்னாள் மனைவி என அழைப்பதை தவிர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன். இது பழிவாங்கவோ அல்லது சண்டையிடவோ அல்ல. பாதுகாக்க. ஒரு தாயின் தவிப்பு இது. நான் அழ மாட்டேன். நிச்சயம் நிமிர்ந்து நிற்பேன். இன்னும் உன்னை அப்பா என்று அழைக்கும் 2 பையன்களுக்காக. அவர்களுக்காக நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் என்று ஆர்த்தி ரவி அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்