- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய்க்காக எழுதப்பட்ட கதையில் நான் ஹீரோவாக நடிக்கிறேன் - கிழக்கு சீமையிலே பட நடிகருக்கு...

நடிகர் விஜய்க்காக எழுதப்பட்ட கதையில் நான் ஹீரோவாக நடிக்கிறேன் – கிழக்கு சீமையிலே பட நடிகருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடம் நல்ல நடிகராக வரவேற்பை பெற்றவர் விக்னேஷ். கிழக்குச் சீமையிலே சின்னத்தாயி பசும்பொன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் விக்னேஷ் கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் சொந்த ஊரான ஈரோட்டில் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் தற்போது ரெட்பிளவர் என்ற படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.

இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் நடிகர் விக்னேஷ் கதாநாயகனாக நடித்த படம் ரெட் பிளவர். சயின்ஸ்பிக்சன் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மனிஷா ஜஷ்னானி நாயகியாக நடித்திருக்கிறார். சந்திரமுகி இந்தியன் 2 எந்திரன் உள்ளிட்ட படங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகளில் பணியாற்றிய ஆன்ட்ரூ பாண்டியன் இந்த படத்தை டைரக்ட் செய்து இருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தில் நாசர் தலைவாசல் விஜய் ஜான் விஜய் ஒய்ஜி மகேந்திரன் லீலா சாம்சன் நிழல்கள் ரவி கார்த்திக் சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கே மாணிக்கம் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். வருகிற 8ம் தேதி இந்த படம் ரிலீசாகிறது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ரெட் பிளவர் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது.

இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சேலம் சூரமங்கலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இதில் படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் மற்றும் நடிகர் விக்னேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விக்னேஷ் கூறியதாவது, 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறேன். இடையில் தொழில் விஷயமாக சொந்த ஊருக்கு சென்று விட்டேன். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளேன்.

- Advertisement -

இந்த படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் என்னிடம் கதையைச் சொன்னார். கதையை கேட்ட போது ரொம்பவும் ஆச்சரியமாக இருந்தது. அப்போது அவர், இந்த கதையை நடிகர் விஜய்க்கு எழுதி வைத்திருந்தேன். அவர் இப்போது அரசியல் சென்று விட்டதால் அவருக்கு பதிலாக உங்களை வைத்து இந்த படத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறோம் என்று கூறினார். அது எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. உடனே இந்த படத்தில் நடிக்க நான் ஒப்புக் கொண்டேன்.

வருகிற 2047ம் ஆண்டில் நடக்க போகும் சம்பவத்தை கற்பனையாக வைத்து இந்த படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்து முடிந்த ஆபரேஷன் சிந்தூர் போன்று இந்த படத்தின் கதைக்களம் உள்ளது. இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். கேரளா கர்நாடகா தமிழகம் ஆகிய பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரெட் பிளவர் படம் ரிலீஸ் செய்யப்படுகிறது என்று நடிகர் விக்னேஷ் கூறினார்.

- Advertisement -

சற்று முன்