- Advertisement -
Homeபொழுதுபோக்குசீனாவில் அதிரிபுதிரி வசூலில் மகாராஜா, இதுவரை வசூலித்தது இத்தனை கோடிகளா? 7 ஆண்டுகளுக்கு பின் மாஸ்...

சீனாவில் அதிரிபுதிரி வசூலில் மகாராஜா, இதுவரை வசூலித்தது இத்தனை கோடிகளா? 7 ஆண்டுகளுக்கு பின் மாஸ் காட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

- Advertisement -

கடந்த ஆண்டில் ஜூன் 14ம் தேதி ரிலீஸான படம் மகாராஜா. குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கிய இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோ தயாரித்திருந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி சலூன் கடை பார்பர் கேரக்டரில் நடித்திருந்தார். அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்திருந்தார்.

மேலும் அபிராமி நட்டி மம்தா மோகன்தாஸ் சாச்சனா சிங்கம்புலி முனீஷ்காந்த் அருள்தாஸ் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. கடந்தாண்டில் வெளியாகி ரூ. 100 கோடி வசூலித்த படங்களில் மகாராஜா படமும் ஒன்றாகும்.

- Advertisement -

தொடர்ந்து பெரிய வரவேற்பை பெறாத படங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதிக்கு மகாராஜா படத்துக்கு கிடைத்த அபார வெற்றி குறிப்பிடத்தக்கது. இது அவரது 50வது படமாகவும் இருந்தது. இந்த படத்தில் சிறுமியர் பாலியல் வன்முறை குறித்த கருவை மையமாக கொண்டு கதைக்களம் உருவாக்கப்பட்டு இருந்தது.

மகாராஜா படம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதே போல் இந்த படம் சீனாவிலும் 40 ஆயிரம் தியேட்டர்களில் கடந்த மாதத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தை சீனா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

மகாராஜா படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் பரோட்டோ மாஸ்டராக நடித்து வருகிறார். அடுத்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்திலும், சுந்தரபாண்டியன் பட இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் இயக்கத்திலும் 2 படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.

சீனாவில் கடந்த மாதம் 40 ஆயிரம் திரைகளில் வெளியான மகாராஜா படம் இதுவரை 90 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. 2018ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு சென்ற படங்களில் தங்கல் படம்தான் அதிக வசூலை பெற்றது. அதற்கு அடுத்தபடியாக 7 ஆண்டுகள் கழித்து சென்ற இந்திய சினிமாவில் தமிழ் படம் மகாராஜா, 90 கோடி ரூபாய் என்ற அபார வசூல் சாதனையை புரிந்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்