- Advertisement -
Homeபொழுதுபோக்குஆயிரத்தில் ஒருவன் 2 படம் குறித்து வெளிப்படையாக சொன்ன இயக்குனர் செல்வராகவன் - இப்படி சொல்லிட்டாரே...

ஆயிரத்தில் ஒருவன் 2 படம் குறித்து வெளிப்படையாக சொன்ன இயக்குனர் செல்வராகவன் – இப்படி சொல்லிட்டாரே என அப்செட் ஆன கார்த்தி ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் செல்வராகவன். குறிப்பாக காதல் கொண்டேன் 7ஜி ரெயின்போ காலனி புதுப்பேட்டை ஆயிரத்தில் ஒருவன் மயக்கம் என்ன என்ஜிகே நானே வருவேன் போன்ற பல படங்களை அவர் ரசிகர்களுக்கு தந்திருக்கிறார்.

தற்போது செல்வராகவன் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். பீஸ்ட் பகாசூரன் ராயன் மார்க் ஆண்டனி என பல படங்களில் அவரது பக்குவப்பட்ட நடிப்பை பார்த்து ரசிகர்கள் பாராட்டினர். இப்போது ஜீவி பிரகாஷ்குமார் நடிப்பில் மெண்டல் மனதில் மற்றும் 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகம் ஆகிய படங்களை செல்வராகவன் டைரக்ட் செய்து வருகிறார்.

- Advertisement -

செல்வராகவன் இயக்கிய படங்களில் ஆயிரத்தில் ஒருவன் படம் ஒரு முக்கிய படமாக இருந்தது. இதில் கார்த்தி பார்த்திபன் ரீமாசென் ஆண்ட்ரியா போன்றவர்களின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. இந்த படத்தின் கதையும் கதைக்களமும் திரைக்கதையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதனால் இந்த படத்தின் 2ம் பாகத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துள்ளனர்.

ஆனால் ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகமாக கண்டிப்பாக உருவாகும் என்று ஏற்கனவே இயக்குனர் செல்வராகவன் சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தார். ஆனால் அதற்கு பிறகு அதற்கான எந்தவித நடவடிக்கைகளும் அறிகுறிகளும் இல்லை. நடிகர் கார்த்தி அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். ஆயிரத்தில் ஒருவன் 2 படம் குறித்த எந்த அப்டேட்டும் இல்லை.

- Advertisement -

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் செல்வராகவன் கூறியதாவது, புதுப்பேட்டை 2 படம் நிச்சயமாக உருவாகும். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் உருவாவது என் கையில் இல்லை. இந்த படம் உருவாக அனைத்தும் சரியாக அமைய வேண்டும். தற்போது தொழில்நுட்பம் முன்னேறி இருப்பதால் அது எளிமையானது தான்.

7ஜி ரெயின்போ காலனி 2 மற்றும் மெண்டல் மனதில் படங்கள் ஆகிய 2 படங்களும் இந்த ஆண்டில் திரைக்கு வந்துவிடும். இதுதவிர புதிதாக ஒரு கதையும் இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றும் இயக்குனர் செல்வராகவன் கூறினார். அதே நேரத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் படம் உருவாவது தன் கையில் என்று ஒரு இயக்குனராக அவர் கூறியிருப்பது ரசிகர்களை அப்செட் ஆக செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்