தமிழ் சினிமாவில் மிகவும் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக முன்னேற்றம் கண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் அது இது எது என்ற காமெடி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தவர் சிவகார்த்திகேயன். அப்போது சினிமா நடிகர் நடிகைகளை நேர்காணல் செய்தல், விருதுகள் வழங்கும் விழாவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குதல் போன்ற பணிகளை செய்து வந்தார் சிவகார்த்திகேயன்.
ஒரு கட்டத்தில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா என்ற படத்தில் சிவகார்த்திகேயன் அறிமுக நாயகனாக நடித்தார். இந்த படத்தில் ஓவியா ஜோடியாக நடித்திருந்தார். காமெடி காதல் கலந்த இந்த படம் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து எதிர்நீச்சல், மனம் கொத்திப் பறவை படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதன்பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ, காக்கிச்சட்டை, வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார் நடிகர் சிவகார்த்திகேயன். அதன்பிறகு மான் கராத்தே, சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ, மிஸ்டர் லோக்கல், மாவீரன், டாக்டர், சமீபத்தில் வெளியான அயலான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார்.
நடிகர் சிவகார்த்திகேயனை பொறுத்தவரை தனது வளர்ச்சியை ஆரம்பித்து இருந்தே மிக துல்லியமாக திட்டமிட்டு அதற்கேற்ற தனது சினிமா பயணத்தை அமைத்துக் கொண்டவர். குறிப்பாக தனது படங்களில் நடிக்கும் கதாநாயகிகளை, பெரிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நாயகிகளையே தனக்கும் ஹீரோயினாக நடிக்க வைத்தார்.
மேலும் சமூக வலைதளங்கள் வாயிலாக தனக்கு சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பும் ரசிகர் மத்தியில் ஆதரவும் இருப்பதை இன்னும் அதிகளவில் பல மடங்கு அதிகமாகி காட்டி தனது புகழை பெருக்கிக் கொண்டார். அது மட்டுமின்றி குடும்பம் குடும்பமாக தனது படங்களை ரசிக்கும் விதமாக அது போன்ற கதைகளை தனது படங்களில் இருக்ருமாறு ஃபேமிலி ஆடியன்ஸ் கவரும் விதமான படங்களில் அதிகமாக நடித்தார்.
இப்போது லேட்டஸ்ட் அப்டேட் ஆக சிவகார்த்திகேயன் துவக்கத்தில் ஆண்டுக்கு 2 அல்லது 3 படங்கள் நடித்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக, ஆண்டுக்கு ஒரு படம் மட்டுமே நடிக்கிறார். இதற்கு முக்கிய காரணம் ரஜினி, விஜய், அஜித்குமார் போன்றவர்கள் ஆண்டுக்கு ஒரு படம் நடிப்பதுதான் அவர்களின் ஸ்டைலாக உள்ளது. ஏனெனில் ஒரு படத்துக்கும், அடுத்த படத்திற்கும் உள்ள இடைவெளி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். படம் சுமாராக இருந்தால் கூட அந்த படம் பெரிய வெற்றியை பெற்று விடும் என்பதுதான் அதன் பார்முலா. அதே பார்முலாவை பயன்படுத்தி நடிகர் சிவகார்த்திகேயனும் இப்போது ஆண்டுக்கு ஒரு படம் என்ற அளவில் நடித்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.





