கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு உலக அழகி பட்டம் வென்றவர் நடிகை ஐஸ்வர்யா ராய். ஆனால் இப்போதும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்றுதான் சினிமா ரசிகர்களால் அவர் அழைக்கப்படுகிறார். தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் என்ற படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிகையாக அறிமுகமானார்.
இருவர் படத்தில் அவர் நடிகர் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் மணிரத்னம் இயக்கிய படத்தில் நடித்ததை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற ஐஸ்வர்யா ராய், அங்கு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். ஷாருக்கான் சல்மான்கான் அமீர்கான் ஹிருத்திக் ரோஷன் அபிஷேக் பச்சன் போன்ற ஸ்டார் நட்சத்திரங்களுடன் நடித்து பாலிவுட்டில் முன்னணி நடிகையாக ஐஸ்வர்யா ராய் மாறினார்.
தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் அவருக்கு நடிக்க வாய்ப்புகள் வந்தது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் ராஜிவ் மேனன் இயக்கத்தில் கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் அடுத்து ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் மணிரத்னம் இயக்கத்தில் இராவணன் பொன்னியின் செல்வன் என தொடர்ந்து பல படங்களில் ஐஸ்வர்யாராய் நடித்திருக்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன் தமிழில் பொன்னியின் செல்வன் 1 மற்றும் பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களில் ஐஸ்வர்யா ராய் நந்தினி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
சிறந்த படங்கள் நல்ல கேரக்டர்களை தொடர்ந்து தேர்வு செய்து ஐஸ்வர்யாராய் நடித்து வருகிறார். பாலிவுட்டில் சீனியர் நட்சத்திர நடிகர் அமிதாப் பச்சனின் மகன் நடிகர் அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா ராய் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு ஆராத்யா என்ற 13 வயது மகள் இருக்கிறார். வெகு விரைவில் ஆராத்யாவும் சினிமாவில் அறிமுகமாகி அவரும் ஐஸ்வர்யாராய் போலவே ஒரு உச்ச நட்சத்திரமாக இந்தி சினிமாவில் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனது மனைவி ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யா குறித்து நடிகர் அபிஷேக் பச்சன் பேசி இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. அபிஷேக் பச்சன் ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது, எங்கள் மகள் ஆராத்யா பச்சனிடம் என் தந்தை பெரும் நடிகர், என் மனைவி உலகப் புகழ்பெற்ற நடிகை என்றெல்லாம் ஒருபோதும் நான் பேசியது இல்லை. ஆனால் அவள் இப்போது வளர்ந்து விட்டாள். எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறாள் என்று நம்புகிறேன்.
எங்கள் மகள் ஆராத்யா எந்த சமூக ஊடகங்களிலும் இல்லை. அவளிடம் மொபைல் போனும் இல்லை. இதற்கான பெருமை முழுக்க முழுக்க என் மனைவி ஐஸ்வர்யா ராயை மட்டுமே சேரும். எங்கள் குழந்தை எங்கள் குடும்பத்தின் பெருமை. மகிழ்ச்சி. நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று நடிகர் அபிஷேக் பச்சன் பெருமிதமாக கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





