நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்திருந்தார். படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்து இருந்தார். படத்தில் முக்கிய கேரக்டர்களில் திரிஷா பிரபு பிரசன்னா சிம்ரன் அர்ஜூன்தாஸ் பிரியா வாரியர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி வெளியான படம் விடாமுயற்சி. அஜீத்குமார் திரிஷா அர்ஜூன் ஆரவ் ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் குட் பேட் அக்லி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது.
நடிகர் அஜீத்குமாரின் மிக தீவிரமான ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன், இந்த படத்தை அஜீத்குமார் ரசிகர்களுக்காக மட்டுமே உருவாக்கி இருக்கிறார். காட்சிக்கு காட்சி அஜீத்தின் பெருமை பேசும் ஒரு திரைப்படமாக இயக்கி உள்ளதார். பில்லா தீனா வரலாறு அமர்க்களம் வாலி ஆகிய படங்களின் ரெபரென்ஸ் ஆக இந்த படம் உருவாகி வெளிவந்திருக்கிறது.
குட் பேட் அக்லி படம் வெளியான 7 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது. மேலும் தமிழ் நாட்டில் மட்டுமே 120 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியிருக்கிறது. அதனால் மீண்டும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் அஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில்தான் அடுத்த படமும் என்ற முடிவில் அஜீத்குமார் இருந்து வருகிறார் என்று தகவல் வெளியானது.
இதற்கிடையே நடிகர் தனுஷ் நடிகர் அஜீத்குமாரை சந்தித்து ஏற்கனவே கதை சொன்ன நிலையில் கதை ரொம்பவும் பிடித்துவிட்டதாக கூறிய அஜீத்குமார், ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க என்று தனுஷிடம் சொல்லி இருக்கிறார். இந்த மாதம் தமிழ்நாட்டுக்கு வரும் அஜீத்குமார், தனுஷ் சந்திப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இப்போது ஜூன் மாதம் நாம் சந்திப்போம் என தனுஷிடம் கதை கேட்பதை அஜீத்குமார் தள்ளி வைத்திருக்கிறார்.
இப்படி அஜீத்குமார் சொல்ல காரணம், அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலேயே ஒரு படம் பண்ணுவோம் என்ற முடிவுக்கு அஜீத்குமார் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் வருகிற ஜூன் மாதம் தனுஷ் சொல்கிற கதை அஜீத்குமாருக்கு மிகவும் பிடித்து விட்டால், இந்த முடிவில் மாற்றம் வரவும் வாய்ப்புள்ளது. ஆனால் இப்போதைக்கு ஆதிக் ரவிச்சந்திரன்தான் முன்னிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





