- Advertisement -
Homeபொழுதுபோக்குலண்டனில் நடிகர் அஜீத்குமார் பங்கேற்றும் கார் ரேஸ்சை துவங்கி வைக்கும் முதல்வர், விளையாட்டுத்துறை மீது...

லண்டனில் நடிகர் அஜீத்குமார் பங்கேற்றும் கார் ரேஸ்சை துவங்கி வைக்கும் முதல்வர், விளையாட்டுத்துறை மீது விஜய் காட்டும் ஆர்வம் – ஏகே பெருமிதம்!

- Advertisement -

நடிகர் அஜீத் குமார் தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்து புகழில் உச்சம் தொட்டவர். ஆனால் அவர் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பதை காட்டிலும் கார் ரேஸ் பைக் ரேஸ் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டி அந்த பந்தயங்களில் தீவிரமாக பங்கேற்று வருகிறார்.

குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் அவர் தொடர்ந்து கார் ரேஸ் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர் ஸ்டோன் சர்வதேச ரேசிங் சர்க்யூட் பாதையில் மிச்சலின் லீமேன்ஸ் கோப்பை கார் பந்தய தொடர் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த போட்டியின் தொடக்க விழாவில் தமிழக முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பச்சைக் கொடி அசைத்து பந்தயத்தை தொடங்கி வைக்க உள்ளார். இந்த பந்தயக் களத்தில் நடிகர் அஜீத்குமாரும் போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அஜீத்குமார் கூறியதாவது, சினிமாவில் நாங்கள் சக நடிகர்களாக இருக்கிறோம். விஜய் முதலமைச்சர் ஆனதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. தமிழ்நாட்டில் விளையாட்டு துறையை மேம்படுத்த விஜய் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

- Advertisement -

தன் பிஸியான பணி சூழல்களுக்கு இடையே என்னுடைய அழைப்பின் பேரில் மிச்சலின் லீமேன்ஸ் கோப்பை கார் பந்தய தொடரை தொடங்கி வைக்க முதல்வர் விஜய் லண்டன் வந்துள்ளார். விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக அவர் நிறைய செய்கிறார். லண்டனில் உள்ள சில்வர் ஸ்டோன் ரேசிங் டிராக் போலவே சென்னையில் உருவாக்க அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.

மோட்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற அனைத்தும் இந்தியாவில் வரவேண்டும் என்பதே என் விருப்பம். லண்டனில் நடப்பது போன்ற போட்டிகள் சென்னையில் நடைபெற வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது என்று நடிகர் அஜீத்குமார் கூறியிருக்கிறார். இந்த பந்தய தொடரில் அஜீத் ரெட் ஆண்ட் பை விராஜ் அணியின் சார்பாக அஜீத்குமார் களமிறங்குகிறார்.

- Advertisement -

சற்று முன்