- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரசித்த பெற்ற கோவிலுக்கு தனது மகளுடன் திடீர் விசிட் செய்த நடிகர் அஜீத்குமார் - ரசிகர்களின்...

பிரசித்த பெற்ற கோவிலுக்கு தனது மகளுடன் திடீர் விசிட் செய்த நடிகர் அஜீத்குமார் – ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிய ஏகே செய்த தரமான செயல்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் இந்த ஆண்டில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என 2 படங்கள் வெளியாகின. இந்த படங்களில் குட் பேட் அக்லி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் விடாமுயற்சி படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்தது.

இதைத் தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கே தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை அஜீத்குமார் தந்திருக்கிறார். வருகிற பிப்ரவரி மாதம் ஏகே 64 படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது. ஆனால் இன்னும் தயாரிப்பாளர் யார் என்பது முடிவாகவில்லை.

- Advertisement -

இந்த சூழலில் நடிகர் அஜீத்குமார் இந்த 2025ம் ஆண்டு முழுவதும் சினிமாவில் நடிக்காமல் முழுக்க முழுக்க கார் ரேஸ்க்காகவே ஒதுக்கி விட்டார். கடந்த 12 மாதங்களாக பல்வேறு நாடுகளில் நடந்த கார் ரேஸில் அவர் கலந்துக்கொண்டார். அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற அணிக்கு அவர் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய திருப்பூர் சுப்ரமணியன், போட்டி இல்லாததால் அஜீத்குமாரின் அடுத்த படம் சூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்கவும் இங்கு ஆள் இல்லை. 300 கோடி ரூபாய் போட்டு படம் எடுக்கிறார்கள்.

- Advertisement -

ஆனால் அஜீத்துக்கு அவ்வளவு வியாபாரம் இல்லை. தியேட்டர், சேட்டிலைட், ஓடிடி, ஆடியோ என ஒரு வியாபாரமும் கிடையாது என்று பேசியது ஏகே ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில் நடிகர் அஜீத்குமார் கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஊட்டுக்குளங்கரா பகவதி அம்மன் கோவிலுக்கு திடீரென வருகை தந்தார்.

கேரளாவில் பிரசித்தி பெற்ற முக்கிய ஆன்மிக தலங்களில் ஒன்றாக விளங்கும் பாலக்காடு ஊட்டுக்குளங்கரா கோவிலுக்கு தனது மகள் அனோஷ்காவுடன் அஜீத்குமார் வந்திருந்தார். இருவரும் சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு காரில் ஏறச் சென்ற அஜீத்குமாரை அங்கிருந்த ரசிகர்கள் திடீரென சூழ்ந்துக் கொண்டதால் நெரிலும் பரபரப்பும் ஏற்பட்டது. அங்கிருந்த ரசிகர்களுக்கு கையால் இதயம் சிம்பல் காட்டி சிரித்தபடி அஜீத்குமார் தனது மகளுடன் காரில் ஏறிச் சென்றார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்