பொதுவாக சில நட்சத்திர நடிகர்கள் தன்னுடன் படங்களில் நடிக்கும் சக நடிகர்கள் நடிகைகளை பெரியதாக மதிக்க மாட்டார்கள். அலட்சியமாக அவர்களிடம் நடந்துக்கொள்வார்கள். ஆனால் மேடைகளில் மற்றவர்களை மதிப்பது போலவும், ரசிகர்கள் தான் என் உலகம் என்பது போலவும் கைதட்டல் வாங்குவதற்காக பேசுவார்கள். ஆனால் உண்மையில் அவர்களது கேரக்டர் வேறுமாதிரியாக இருக்கும்.
நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் போக்கிரி. இதில் அசின் நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் வடிவேலு பிரகாஷ்ராஜ் வையாபுரி ஸ்ரீமன் நாசர் ஆனந்தராஜ் தாமு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் போலீஸ் கமிஷனராக நடிகர் நெப்போலியன் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்துக்கு பிறகு பல ஆண்டுகளாக நடிகர் விஜயுடன் நெப்போலியன் இணைந்து நடிக்கவில்லை.
இதற்கு காரணம், போக்கிரி படப்பிடிப்பில் நடிகர் நெப்போலியனை பார்க்க வந்த அவரது நண்பர்கள் சிலர், நடிகர் விஜயை காண வேண்டும். அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசையாக கூறியிருக்கின்றனர். அதனால் நடிகர் நெப்போலியனும் யதார்த்தமாக அவர்களை பிரேக்கப் நேரத்தில் விஜய் இருந்த கேரவனுக்கு அழைத்து சென்றிருக்கிறார்.
அந்த நேரத்தில் பயங்கரமாக டென்சன் ஆன நடிகர் விஜய், அவர்கள் முன்னிலையிலேயே என்னை எதுக்கு இப்படி டிஸ்டர்ப் பண்றீங்க? என்று நடிகர் நெப்போலியனை கேட்டு அவமானப்படுத்தி இருக்கிறார். அதில் இருந்து விஜயுடன் பேசுவதை தவிர்த்த விஜய், அவருடன் நடிப்பதும் இல்லை. அவர் படங்களை பார்ப்பதும் இல்லை என்று சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.
இதேபோல் மற்றொரு சீனியர் நடிகருக்கும் ஒரு அவமானம் நேர்ந்திருக்கிறது. நடிகர் ராதாரவி தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர். எம்ஜிஆர் சிவாஜி கணேசன் போன்றவர்களுடன் நடித்த நடிகவேள் எம்ஆர் ராதாவின் மகன். சர்கார் படத்தில் விஜயுடன் நடித்த போது, தன்னுடைய பேரன் உங்கள் தீவிர ரசிகன் என்பதால் உங்களை நேரில் பார்த்து புகைப்படம் எடுக்க ஆசைப்படுகிறான். அழைத்து வரட்டுமா என்று ராதாரவி விஜயிடம் கேட்டிருக்கிறார். அவரும் ஓகே சொல்லிவிட குடும்பத்துடன் வந்து அவர்கள் புகைப்படம் எடுத்து விட்டு சென்றிருக்கின்றனர்.
இது நடந்த சில வாரங்களுக்கு பிறகு வேறு ஒரு நிகழ்ச்சிக்காக நடிகர் விஜயை நேரில் சந்தித்து பேச நடிகர் ராதாரவி விரும்பியிருக்கிறார். இதற்காக விஜயின் பிஏவிடம் நடிகர் ராதாரவி பேசியிருக்கிறார். அதற்கு அவர், சார் உங்களை வரச்சொல்லி விட்டார். ஆனால் அன்றைக்கு வந்தது போல் கூட்டத்தை கூட்டிக்கொண்டு வரவேண்டாம் என்று உங்களிடம் சொல்லச் சொன்னார் என்று கூறியிருக்கிறார். நான் வரவே இல்லை என்று பிஏவிடம் சொன்ன ராதாரவி, விஜய்க்கு அது கூட்டமாக தெரிகிறது. ஆனால் அது என் குடும்பம் என்று ஒரு நேர்காணலில் தனது வருத்தத்தை கூறியிருக்கிறார்.





