- Advertisement -
Homeபொழுதுபோக்குஷங்கர் இயக்கத்தில் இதுவரை நடிகர் அஜீத்குமார் நடிக்காதது ஏன்? நீண்ட நாட்களுக்கு பின் வெளிச்சத்துக்கு வந்த...

ஷங்கர் இயக்கத்தில் இதுவரை நடிகர் அஜீத்குமார் நடிக்காதது ஏன்? நீண்ட நாட்களுக்கு பின் வெளிச்சத்துக்கு வந்த உண்மை – இப்படி ஒரு விஷயத்தை ஏகே பாலோ அப் பண்றாரா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் மிக முக்கிய முன்னணி நடிகராக இருந்து வருகிறார். டாப் ஸ்டார் நடிகர்களின் ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் இருந்து வருகின்றனர். இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவரும் அஜீத்குமார், அடுத்ததாக குட்பேட் அக்லி படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள இருக்கிறார். வருகிற 20ம் தேதி முதல் ஐதராபாத்தில் குட்பேட் அக்லி படப்பிடிப்பு துவங்குகிறது.

தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனராக இருந்து வருபவர் ஷங்கர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், பிரசாந்த், சித்தார்த், அர்ஜூன் உள்ளிட்டோர் ஷங்கர் படத்தில் நடித்துள்ளனர். சிவாஜி, எந்திரன், ரோபோ 2.0, இந்தியன், இந்தியன் 2, இந்தியன் 3. நண்பன், அந்நியன், ஐ, ஜீன்ஸ், பாய்ஸ், முதல்வர், ஜெண்டில்மேன் என அவர்களது படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன.

- Advertisement -

இந்நிலையில், நடிகர் அஜீத்குமார் இதுவரை இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவில்லை. வேள்பாரி நாவலை படமாக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ள நிலையில், அஜீத்குமாரிடம் அந்த படத்தில் நடிப்பது குறித்து இயக்குனர் ஷங்கர் பேசியதாக கூறப்படுகிறது. அதற்கு அஜீத்குமார் சம்மதம் தெரிவித்தாரா, இல்லையா என்பது இதுவரை வெளிச்சத்துக்கு வரவில்லை.

ஆனால் இதுவரை ஷங்கர் படங்களில் அஜீத்குமார் நடிக்காதது ஏன் என்பது தெரிய வந்துள்ளது. அதாவது அஜீத்குமாரை பொருத்த வரை, இயக்குனர் அவருக்கு பிடித்தமானவராக இருக்க வேண்டும். அவரது இஷ்டப்படி படப்பிடிப்பை நடத்த வேண்டும், கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் விதிப்பவராக இருக்க கூடாது. அவருடன் நட்பு ரீதியாக இருப்பவர்களாக இருந்தால் மட்டுமே அஜீத்குமார் படத்தை இயக்க முடியும். அஜீத்துடன் ஷட்டில் காக், பேட்மிண்டன் விளையாட வேண்டும். ஜோவியலாக பழக வேண்டும்.

- Advertisement -

பல ஆண்டுகளுக்கு முன்பே ஒருமுறை, இயக்குனர் ஷங்கர் அஜீத்குமாரிடம் தனது படத்தில் நடிக்க வருமாறு அழைத்து பேசியுள்ளார். அப்போது அஜீத்குமார், உங்கள் படத்தில் கதாநாயகன் இப்படிதான் இருக்க வேண்டும் என்று நீங்கள் ஒரு வரைமுறை வைத்துள்ளீர்கள். அப்படி இருக்க என்னால் முடியாது. அதனால் உங்கள் படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

உண்மையில் இதன் பின்னணி என்னவென்றால், இயக்குனர் ஷங்கர் படத்தில் நடித்தால், ஹீரோ அவர் சொல்கிறபடி கேட்டு நடக்க வேண்டும். எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது என்ற ஈகோ ஷங்கரிடம் உள்ளது. ஆனால் அஜீத்குமார், ஈகோ அதிகம் கொண்டவர். தன்னை யாரும் கேள்வி கேட்பதை, தன்னை மற்றவர் அடக்கி வைப்பதை விரும்பாதவர். அதனால், இரண்டு பேருமே ஈகோ பிடித்தவர்கள் என்பதால் ஷங்கர் படத்தில் அஜீத் நடிக்க வாய்ப்பே இல்லை என்று தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்