- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யாவுக்கு வில்லனாக நடித்த கருப்பு படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி - காமெடி நடிகர் வில்லனாக...

சூர்யாவுக்கு வில்லனாக நடித்த கருப்பு படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி – காமெடி நடிகர் வில்லனாக மாற அவர்தான் காரணமா?

- Advertisement -

ஆரம்பத்தில் பல படங்களில் காமெடி ரோலில் நடித்தவர் ஆர்ஜே பாலாஜி. பிறகு காமெடி கலந்த ஹீரோ ரோலில் அவர் நடித்த படங்கள்தான் மூக்குத்தி அம்மன் வீட்ல விசேஷம் எல்கேஜி சிங்கப்பூர் சலூன் போன்ற படங்கள். இப்போது நடிகர் சூர்யா நடித்த கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி இயக்குனராக இருந்துக்கொண்டு படத்தில் வில்லனாகவும் நடித்திருக்கிறார்.

ஆனால் இந்த படத்தில் முதலில் வில்லனாக நடிக்க கமிட் ஆனவர் இயக்குனர் மிஷ்கின்தான். அவர்தான் கருப்பு படத்தில் வில்லனாக நடிக்க வேண்டியவர். ஆனால் ஒரு நாள் சம்பளம் ரூ. 15 லட்சம் என்று அவர் கூறியதால் மிஷ்கின் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. பிறகு அந்த வில்லன் கேரக்டரில் காமெடி நடிகரான ஆர்ஜே பாலாஜியே நடித்திருக்கிறார்.

- Advertisement -

அதே போல் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் எல்ஐகே. இந்த படத்தின் இயக்குனர் சீமான் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது மிஷ்கின்தான். தனது ஒரு நாள் சம்பளமாக ரூ. 12 லட்சம் கேட்டதால்தான் அவருக்கு பதிலாக சீமான் நடித்தார்.

மேலும் தயாரிப்பாளர் லலித்குமார், இயக்குனர் மிஷ்கினின் நெருங்கிய நண்பர் என்பதால் எல்ஐகே படத்தில் ஒரு நாள் மட்டும் டாக்டர் கேரக்டரில் நடிக்க வைத்து அவருக்கு ரூ.12 லட்சம் சம்பளமாக கொடுத்துள்ளார். மேலும் அவர் தான் லியோ படத்தில் சில நாட்கள் மிஷ்கின் நடித்த போது, ஒரு நாள் சம்பளம் என ரூ. 10 லட்சம் என்ற கணக்கில் பெரும்தொகை தந்துள்ளார்.

- Advertisement -

லியோ படத்தில் ரூ. 10 லட்சம் என துவங்கி எல்ஐகே படத்தில் ரூ. 12 லட்சம் என உயர்ந்து இப்போது தனது ஒரு நாள் சம்பளம் ரூ. 15 என்கிற அளவில் மிஷ்கின் நடிக்க வாய்ப்பு தேடுகிறார். எந்தவிதமான நடிப்பு என்றாலும் அதில் மிக திறம்பட அழுத்தமாக நடிக்கும் வல்லமை கொண்டவர்தான் மிஷ்கின். அதில் யாரும் மாற்றுக் கருத்து சொல்லவே முடியாது.

குறிப்பாக டிராகன் படத்தில் பிரின்ஸிபால் கேரக்டரிலும் வணங்கான் படத்தில் நீதிபதி கேரக்டரிலும் சவரக்கத்தி படத்தில் காமெடி கலந்த வில்லனாகவும் நந்தலாலா படத்தில் மனநிலை தவறியவராகவும் அவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது சூர்யாவுக்கு ஆர்ஜே பாலாஜி வில்லனாக மாறியதற்கே மிஷ்கின் கேட்ட அதிக சம்பளம்தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்