- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்க்கு ஆதரவாக இருப்போம் என்று சொன்ன பிரபல நடிகர், இவரை போல தமிழ் சினிமாவில் ...

விஜய்க்கு ஆதரவாக இருப்போம் என்று சொன்ன பிரபல நடிகர், இவரை போல தமிழ் சினிமாவில் யாருமே சொல்லலையே? தளபதி ரசிகர்கள் ஆதங்கம்!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது அவரது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நேர்கொண்ட பார்வை, தீரன் அதிகாரம் 1, வலிமை, துணிவு, சதுரங்கவேட்டை உள்ளிட்ட படங்களை இயக்கிய எச் வினோத் இயக்கி வருகிறார். இந்த படம், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்த படத்தின் ரீமேக் என்ற தகவலும் உள்ளது.

தளபதி 69 என தற்காலிக பெயர் வைத்துள்ள இந்த படத்தில் பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார். நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் மமிதா பைஜூ, பிரியாமணி, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தை முடித்துவிட்டு, நடிகர் விஜய் சினிமாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். முழு வீச்சுடன் தமிழக அரசியலில் களம் இறங்கி, வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்கிறார். சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் மாநாட்டை நடத்திய பிறகு, பல அரசியல் கட்சிகளின் பார்வை விஜய் பக்கம் திரும்பியுள்ளது.

ஏனெனில் விக்கிரவாண்டியில் 50 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட தவெக கட்சி மாநாட்டில் திரண்டு வந்தது பல லட்சம் பேர் என்பது, குறிப்பிடத்தக்கது. வழக்கமாக அரசியல் கட்சிகளால் அழைத்து வரப்படும் கூட்டமாக இல்லாமல், தானாய் சேர்ந்த கூட்டமாய் விஜய் நடத்திய மாநாட்டில் திரண்ட மக்கள் வௌ்ளத்தை பார்த்து ஆளுங்கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் அசந்து போய்விட்டன.

- Advertisement -

அதே நேரத்தில் 32 ஆண்டுகளாக சினிமாதுறையில் இருந்த விஜய்க்கு இதுவரை நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. அவ்வப்போது வாழ்த்துகளை பகிரும் சிலர் கூட அவரது அரசியல் வருகைக்கு ஆதரவு தருகிறேன். நான் விஜய் பக்கமாக நிற்கிறேன் என்று கூறாமல் இருப்பது விஜய் ரசிகர்களை பலத்த ஆதங்கமடைய செய்திருக்கிறது.

இந்நிலையில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, முகமூடி, பள்ளிக்கூடம், விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் நரேன், விஜய் குறித்து பேசியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் நரேன், தளபதி 69 ஷூட்டிங் நன்றாக போகிறது. விஜய் சினிமாவை விட்டு செல்வது மிகவும் கஷ்டமாக உள்ளது. ஆனால் அரசியலில் அவர் சாதிக்க நினைக்கிறார். அவருக்கு ஆதரவாக இருப்போம், என்று வெளிப்படையாக நடிகர் நரேன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்