- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென வெயிட்டை குறைந்த நடிகர் அஜீத்குமார், அவர் எடுத்த திடீர் அதிரடி முடிவு- அஜீத்குமாரின் எடை...

திடீரென வெயிட்டை குறைந்த நடிகர் அஜீத்குமார், அவர் எடுத்த திடீர் அதிரடி முடிவு- அஜீத்குமாரின் எடை குறைய இப்படி ஒரு காரணம்தான் சொல்றாங்க

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் இப்போது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் இருந்து வருகிறார். அஜர்பைஜானில் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த படத்தில் திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இது ஏற்கனவே வந்த ஒரு ஆங்கில படத்தின் கதை என்றும் சொல்லப்படுகிறது.

அஜீத்குமாரை பொருத்த வரை அவருக்கு என சில பாலிசிகளை வைத்திருக்கிறார். அதாவது அவர் நடிக்கும் படங்களில் உடல் ரீதியான மாற்றங்களை, உடல் எடை குறைக்க, அதிகரிக்க வேண்டிய நிர்பந்தங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார். இதனால்தான் அவர் ஏற்கனவே கஜினி படத்தில் இருந்து பாதியில் விலகி, பின்னர் அதில் சூர்யா நடித்திருக்கிறார்.

- Advertisement -

தன்னை வருத்திக்கொள்ளும்படியான படங்களில், அதிக ரிஸ்க் எடுக்கும் படங்களில் அவர் நடிக்க விரும்புவதில்லை. நான் கடவுள் படத்தில் முதலில் ஆர்யாவுக்கு பதிலாக நடிக்க இருந்ததும் அஜீத்குமார்தான். ஆனால் நீண்ட தலைமுடி, தாடி மீசையுடன் இருக்க முடியாமல் டைரக்டர் பாலாவிடம் அடிக்கடி அஜீத் கேட்டதால், அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் அவர் இழந்தார்.

கோடி கோடியாக சம்பளம் தரும் படங்களில் இப்படி நல்ல நல்ல படங்களில் நடிக்க மறுக்கும் அஜீத் பைக் மற்றும் கார் ரேஸ்களில் மட்டும் ரிஸ்க் எடுத்து கலந்துக்கொள்கிறார். இதில் சிறுசிறு விபத்துகளில் சிக்கி காயம் அடைந்திருக்கிறார். எனினும் இப்போதும் படங்கள் ஷூட்டிங் இல்லாத போது பைக்கில் பல நூறு கிலோ மீட்டர் பயணிப்பதை ஹாபியாக வைத்திருக்கிறார்.

- Advertisement -

விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருந்த அஜீத்குமார், இப்போது 15 கிலோ வரை எடை குறைத்திருக்கிறார். சமீபத்தில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த போது அது உறுதியாகி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், துவக்கத்தில் இருந்தே அசைவ பிரியராக இருந்தவர் அஜீத். சிக்கன், மீன், மட்டன் போன்றவற்றை விரும்பி சாப்பிடுபவர். அஜீத் அவரே சிக்கன், மட்டன் பிரியாணி சமைத்து தந்து நண்பர்களை, குடும்பத்தினரை அசத்துவார்.

இந்நிலையில் திடீரென அதிரடி முடிவெடுத்த அஜீத்குமார், இனிமேல் அசைவம் சாப்பிடுவதில்லை என முடிவெடுத்து, உணவு கட்டுப்பாடுகளை சமீபமாக கடைபிடித்து வருவதால் 15 கிலோ வரை அவரது உடல் எடை குறைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி ரஜினி, விஜய், தனுஷ் போன்றவர்கள் உடல் எடை அதிகமாக இல்லாமல் ஸ்மார்ட் ஆக இருப்பதால் அதே போல் தானும் மாற முடிவு செய்துவிட்டார் என தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்